The lamb of the body

“The lamp of the body is the eye. If therefore your eye is good, your whole body will be full of light.

Matthew 6:22

Eye is the most important part of our body. All things that we do is based on what we see.
Our nature, our decisions, our plans everything is based on what the eye sees.
Eye is the main gate in our body through which good and bad enters.
Eye is the gate which allows light to enter our life or darkness to fill our life.
Many times we believe what we see, we lust because we see, our behavior is based on what we see.
That is why it is important that we control this gate. When we watch ungodly things around, when we watch ungodly movies, when we watch the actions of ungodly friends, when we see social media most of the time, we open the life to darkness and we are lost, we would not know the way, we invite trouble, struggle, confusion and so on.
But when we strife to see things as lead by the Holy Spirit, when we see and read the Word of God, when we make every effort to shut the door for ungodly things, we allow the light to fill our hearts and hence we know the way, we have clarity in life, we become like Christ.

சரீரத்தின் விளக்கு

கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.

Matthew 6:22

நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு கண். நாம் செய்யும் அனைத்து செயல்களும் நாம் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டவை. நமது இயல்புகள், நமது முடிவுகள், நமது திட்டங்கள் அனைத்தும் கண்ணுக்குத் தெரிவதை அடிப்படையாகக் கொண்டது.
நம் உடலில் நன்மையும் தீமையும் நுழையும் முக்கிய வாயில் கண்தான்.
கண் என்பது நம் வாழ்வில் ஒளி நுழைய அல்லது இருள் நம் வாழ்க்கையை நிரப்ப அனுமதிக்கும் வாயில்.
பல சமயங்களில் நாம் பார்ப்பதை நம்புகிறோம், பார்ப்பதால் ஆசைப்படுகிறோம், நாம் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டு நமது நடத்தை அமைகிறது.
அதனால்தான் இந்த வாயிலைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.
நாம் சுற்றியிருக்கும் தெய்வீகமற்ற விஷயங்களைப் பார்க்கும்போது, அசுத்தமான திரைப்படங்களைப் பார்க்கும்போது,  உலக பிரகாரமான நண்பர்களின் செயல்களைப் பார்க்கும்போது, சமூக வலைதளங்களைப் பார்க்கும்போது, வாழ்க்கையை இருளுக்கு திறந்து விடுகிறோம், அதனால் வழி தெரியாமல் தவிக்கிறோம். நம் வாழ்க்கை பிரச்சனை குழப்பம்  போராட்டங்களால்  காணப்படுகிறது.ஆனால்  ஆவியானவர்  நமக்கு  காண்பிக்கிற வேத வசனங்களை  எப்பொழுதும் நாம் பார்க்கும் பொழுது,   நல்ல  காரியங்களை பார்க்கும் பொழுது, நம் வாழ்க்கை  ஒளியால் நிரம்பி இருக்கிறது. அதனால்  தெளிவாக  குழப்பம் இல்லாமல்  நம்மால்  நடக்க முடிகிறது.  கிறிஸ்துவை போல இருக்க முடிகிறது.
 ஆதலால் கண் பார்க்கிறதை கட்டுப்படுத்துங்கள்  தேவனின் காரியங்களை பாருங்கள்  அதுவே  வாழ்க்கைக்கு ஒலி தருகிறதாய் இருக்கிறது.