Share your gift / ஈவை பகிர்ந்து கொள்ளுங்கள்

But to each one of us grace was given according to the measure of Christ’s gift.

Ephesians 4:7

As children of God, we all have received grace in measure as a gift from our Lord Jesus Christ. For some He has given the grace to be an apostle, prophet, evangelist, pastor, and teacher. That does not mean that only those who serve in this capacity have received grace from the Lord.
Today's verse says "each one", which means all who have received Lord Jesus Christ as their savior.
This grace is not given to those who are eligible and worthy, the next verse, 8 says that Lord Jesus Christ delivered sinners in captivity and gave grace as a gift to serve Him.
Apostle Paul was a captive to sin, he was a murderer, but God's abundant grace was given to him to preach the gospel to the gentiles.
Likewise, you and I have received grace too. It may not be like Apostle Paul, but it may be like Barnabas, who is also called son of encouragement, called to encourage others in Christ. It may be the grace of Intercession, called to intercede for others, nations. It may be the grace of generosity called to help others above and beyond.
Find out what is the grace you have received as a gift and share it with others in God's Kingdom. Sometimes what comes naturally, may be prayer or music or intercession is the grace you have received as a gift. Share and use it for the glory of God, so more will be given to you.

கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது

எபேசியர் 4:7

தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசாக அளவிட கிருபையைப் பெற்றுள்ளோம். சிலருக்கு அவர் ஒரு அப்போஸ்தலன், தீர்க்கதரிசி, சுவிசேஷகர், மெய்ப்பர் மற்றும் போதகர் என்னும் கிருபையை கொடுத்துள்ளார். இந்த திறனில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே கர்த்தரிடமிருந்து அருள் கிடைத்துள்ளது என்று அர்த்தமல்ல.
இன்றைய வசனம் "அவனவனுக்குக்" என்று கூறுகிறது, அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் இரட்சகராகப் ஏற்றுக்கொண்ட அனைவருமே.
இந்த கிருபை தகுதியானவர்களுக்கு மற்றும் வழங்கப்படவில்லை, 8  வது வசனம் கூறுகிறது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிறைப்பட்ட பாவிகளை விடுதலையாக்கி அவர்களுக்கு கிருபையை அளித்தார் என்று.
அப்போஸ்தலன் பவுல் பாவத்திற்கு சிறைபிடிக்கப்பட்டவர், அவர் ஒரு கொலைகாரன், ஆனால் புறஜாதியினருக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க கர்த்தரின் ஏராளமான கிருபை அவருக்கு வழங்கப்பட்டது.
அதேபோல், நீங்களும் நானும் கிருபையை  பெற்றுள்ளோம். இது அப்போஸ்தலன் பவுலைப் போல இல்லாவிட்டாலும் பர்னபாஸைப் போல மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற கிருபையாக இருக்கலாம், மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபிக்கிற ஒரு கிருபையாக இருக்கலாம், தாராளமாக மற்றவர்களுக்கு உதவி செய்கிற ஒரு கிருபையாக இருக்கலாம்.
 உங்களுக்கு கொடுக்கப்பட்ட கிருபை எது? அதை கண்டடைந்து மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். சில சமயங்களில் இயல்பாக நாம் செய்கிற காரியமே கர்த்தர் கொடுத்த கிருபை. அது ஜெபம் பண்ணுகிறதாக இருக்கலாம்,  இசைக்கருவிகளை வாசிப்பதாக இருக்கலாம்.
எனவே கர்த்தர் உங்களுக்கு ஈவாகக் கொடுத்த கிருபையை அவருடைய ராஜ்ஜியத்தில் பயன்படும்படி மற்றவர்களுக்கு அதை பகிர்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுக்கு அது கூட கொடுக்கப்படும்.