Honor from God / தேவனாலே வருகிற மகிமை

How can you believe, who receive honor from one another, and do not seek the honor that comes from the only God?

John 5:44

Honor and praise, we all seek for it. In the workplace, business, school, within family members, we all want to be honored.
Honor is not given for anyone, It is given to whom it belongs. When a student has worked hard and acheived top position, he or she is honored.
Similarly God likes to honor you as well.
Honor that God shows towards you  is much more precious than any worldly honor.
Honor that God gives is eternal.
But how to receive this eternal Honor from God?
It is by pleasing Him alone and do what He likes and not please others more than pleasing God.
Whether it be in workplace, business or church or even within own family, we are called to please God first, obey Him first and give Him the honor above everything else. Also when we believe Him blindly even if there is no logic or what He says does not make sense, then we give Him the utmost Honor.
This lifestyle pleases God and He lifts you up and honors you before all.
Whatever you seek, seek fervently the Honor from God.  When He lifts you up nobody can stand against you.

தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?

யோவான் 5:44

மரியாதை மற்றும் பாராட்டு அனைவரும் அதைத் தேடுவார்கள். பணியிடத்தில், வணிகம், பள்ளி, குடும்ப உறுப்பினர்களுக்குள், நாம் அனைவரும் கணம் பெற விரும்புகிறோம்.
கணமும் மகிமையும் எல்லாருக்கும் அளிக்கப்படுவதில்லை.  தகுதி உள்ளவர்களுக்கு மாத்திரம்  அது வழங்கப்படுகிறது. ஒரு மாணவர் மாணவி கடினமாக உழைத்து, முதலிடம் பிடித்தபோது, அவர் அல்லது அவள் கணப்படுத்தப்படுகிறார்கள்.
இதேபோல் கர்த்தர் உங்களையும் கணப்படுத்த விரும்புகிறார்.
கர்த்தர் உங்களுக்குத் தருகிற கணமும் மகிமையும் இந்த உலகத்தின் கணமும் மகிமையை காட்டிலும் பெரியது
கர்த்தர் கொடுக்கும் கனம் நித்தியமானது.
ஆனால் இந்த நித்திய மரியாதையை கர்த்தரிடமிருந்து எவ்வாறு பெறுவது?
கர்த்தரை நாம் கணப்படுத்தும் பொழுது, அவர் விரும்புவதையே செய்யும் பொழுது,  மற்றவர்களை காட்டிலும்  கர்த்தரையே மேலாய் கணப்படுத்தும் பொழுது, கர்த்தரிடமிருந்து   கணத்தையும் மகிமையையும் நாம் பெறுகிறோம்.
அது மாத்திரமல்ல கர்த்தரை முழுமனதாய் நம் விசுவாசிக்கும் பொழுது அவரை கனப்படுத்துகிறோம் அதன் மூலமாக அவரிடம் இருந்து கணத்தை பெற்றுக் கொள்கிறோம்.
இவ்வாறான வாழ்க்கை நடைமுறை கையாளும் பொழுது கர்த்தர் நம்மை உயர்த்துகிறார் மகிமைப்படுத்துகிறார் கணப்படுத்துகிறார். ஆதலால் கர்த்தரை கனப்படுத்துவதில் தீவிரமாய் இருங்கள். கர்த்தர் உங்களை உயர்த்தும் பொழுது ஒருவராலும் எதிர்த்து நிற்பதில்லை.  கர்த்தரை கணப்படுத்துவதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும்.