Strength through weakness / பலவீனத்தில் பலன்

For when I am weak, then I am strong.

2 Corinthians 12:10

We all experience weakness in our lives. Whether it is raising children or performing in the job or managing the family or in our prayer life or reading the scriptures.
Know this, weakness is good when it is handled properly.
God does not work on those who are strong and want to be strong on their own.
Jesus Himself said, those who are well have no need of a physician, but only those who are sick.
Lord Jesus Christ strengthens those who are weak and look unto Him for help.
In the previous verse, we read that the power of God is made perfect in weakness.
Yes, when you are weak and acknowledge it and when you go to Lord Jesus, then His power is manifested in your weakness and you will then be able to accomplish much greater things.
When you feel weak, don't try to become strong by your own effort. The first things you do is run to Lord Jesus and surrender your weakness to Him and ask Him for help.
Then you will be able to chase a thousand and take great victory by the power of Christ.
What is your weakness today, surrender it at the feet of the Lord Jesus Christ and ask Him for help.

அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்

2 கொரிந்தியர் 12:10

நாம் அனைவரும் நம் வாழ்வில் பலவீனத்தை அனுபவிக்கிறோம். இது குழந்தைகளை வளர்ப்பது ஆனாலும் சரி அல்லது வேலை காரியங்கள் ஆனாலும் சரி அல்லது குடும்ப காரியங்கள் ஆனாலும் சரி அல்லது ஜெபிக்கக்கூடிய வேதத்தை வாசிக்கக் கூடிய காரியம் ஆனாலும் சரி, பலவீனங்கள் நம்மை தோல்வி அடைய செய்கின்றது.
பலவீனத்தை சரியாக கையாளப்படும்போது அது நல்லது.
கர்த்தர் வலிமையானவர்கள் மற்றும் சொந்தமாக வலுவாக இருக்க விரும்புவோருக்கு வேலை செய்வதில்லை.
இயேசுவே இவ்வாறாக கூறினார் 'பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை"
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பலவீனமானவர்களை பலப்படுத்துகிறார், .
முந்தைய வசனம் கூறுகிறது,  பலவீனத்தில் கர்த்தருடைய வல்லமை  பூரணமாகிறது என்று.
ஆமாம், நீங்கள் பலவீனத்தை ஒப்புக்கொண்டு கர்த்தராகிய இயேசுவிடம் சென்று உதவி கேட்கும் பொழுது  அவருடைய வல்லமை, உங்கள் பலவீனத்தில் வெளிப்படும், பின்னர் நீங்கள் மிகப் பெரிய விஷயங்களைச் செய்ய முடியும்.
நீங்கள் பலவீனமாக உணரும்போது, உங்கள் சொந்த முயற்சியால் வலுவாக முயற்சிக்காதீர்கள். நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் கர்த்தராகிய இயேசுவிடம் ஓடி, உங்கள் பலவீனத்தை அவரிடம் ஒப்படைத்து அவரிடம் உதவி கேட்பது.
அப்படியாக செய்யும் பொழுது நீங்கள் ஆயிரத்தைத் துரத்தி கிறிஸ்துவின் சக்தியால் பெரும் வெற்றியைப் பெற முடியும்.
இன்று உங்கள் பலவீனம் என்ன, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலடியில் சரணடைந்து அவரிடம் உதவி கேளுங்கள்.