Facing Stubbornness ? / பிடிவாதத்தை சந்திக்கிறீர்களா ?

But Sihon king of Heshbon refused to let us pass through. For the LORD your God had made his spirit stubborn and his heart obstinate in order to give him into your hands, as he has now done.

Deuteronomy 2:30

Are you facing stubbornness? Are you facing obstacle and is there hurdle, do you feel like you are hitting a wall and no way forward? Rejoice.
For the LORD is going to make the stubbornness submit to you.
We all get frustrated when we face resistance or stubbornness.
We tend to give up when the stubbornness and resistance becomes intense.
But we learn from the passage of scripture today that stubbornness and resistance are allowed by God, so it can be defeated.
Are you facing resistance and stubbornness when you pray for the salvation of loved ones, in your family, in your work place?
Do not give up pray the more harder.
Because LORD GOD is the one who fights your battle and He made the hearts stubborn in order to submit and surrender and to be saved.
Stubbornness means deliverance coming soon.

ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

உபாகமம் 2:30

நீங்கள் பிடிவாதத்தை எதிர்கொள்கிறீர்களா? நீங்கள் தடையை எதிர்கொள்கிறீர்களா?, உங்களை முன்னேறி செல்ல விடாமல் ஒரு சுவர் இருக்கிறதை உணர்கிறீர்களா?, முன்னோக்கி வழி இல்லை என்று நினைக்கிறீர்களா? மகிழ்ச்சி அடையுங்கள்.
கர்த்தர் பிடிவாதத்தை உங்களுக்கு அடிபணியச் செய்யப் போகிறார்.
எதிர்ப்பை அல்லது பிடிவாதத்தை எதிர்கொள்ளும்போது நாம் அனைவரும் விரக்தியடைகிறோம்.
பிடிவாதமும் எதிர்ப்பும் தீவிரமாக இருக்கும்போது நாம் கைவிட முனைகிறோம்.
ஆனால் பிடிவாதமும் எதிர்ப்பும் கடவுளால் அனுமதிக்கப்படுகின்றன என்பதை இன்றைய வேதத்தின் பகுதியில் இருந்து நாம் கற்றுக்கொள்கிறோம், எனவே அதை தோற்கடிக்க முடியும்.
நீங்கள் நேசிக்கிறவர்களுடைய இரட்சிப்புக்காக ஜெபிக்கும் பொழுதோ, குடும்பத்தினருக்காக பிள்ளைகளுக்காக ஜெபிக்கும் பொழுதோ, உங்கள் வேலையில் சில காரியங்களுக்காக ஜெபிக்கும் பொழுதோ, கடும் எதிர்ப்பையும் பிடிவாதத்தையும் நீங்கள் காணப்படும், ஆனால் திடன் கொள்ளுங்கள், கர்த்தர் அவர்கள் மனதை கடினப்படுத்தினது ரட்சிப்பதற்கே.
உங்களுக்காக யுத்தம் செய்கிறவர் கர்த்தரே.
ஆதலால் மனம் சோர்ந்து விட்டு விடாதீர்கள், இன்னும் ஊக்கமாக ஜெபியுங்கள். கர்த்தர் தாமே கடினமான பிடிவாதமான இருதயங்களை உருக்குகிறவர் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்து இருப்பது நடைபெறும்.