Seek good and not evil / தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்

Seek good and not evil, That you may live; So the LORD God of hosts will be with you.

Amos 5:14

Seeking good touches God's heart. It not only pleases Him but He comes to be with us.
But what is seeking good. It is not seeking, working hard, sweating, and praying only for our own welfare but also for the welfare of others.
We are called everyday of our lives to represent God and show His nature to others.
His nature is love and welfare for all. God loves all and longs to do good. He does not ever think evil about others.
It is not true that God cannot be seen. God, our LORD Jesus Christ is seen through us who believe in Him.
Hence when we seek to do good to others, they see God and praise Him.
Therefore, from today find ways to bless others. Do good to others from whom you don't get any return.
Do not seek evil or vengeance or desire bad for others.
When you seek good and not evil, the Lord of Hosts of heavens armies will be with you and do good to you and rejoice in doing good to you and you will live.

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.

ஆமோஸ் 5:14

நல்லதைத் தேடுவது கர்த்தரின் இருதயத்தைத் தொடுகிறது. நம்மோடு மகிழ்ச்சியாய் இருக்கிறார் அது மாத்திரமல்ல நம்மோடு வந்து வாசம் செய்கிறார்.
நல்லதை தேடுவது என்றால் என்ன? எப்பொழுதும் நம்முடைய சொந்த நலனுக்காக உழைத்து பிரயாசப்பட்டு ஜெபித்து கேட்பது மாத்திரமே அல்ல மாறாக பிறருடைய நலனை கருதி அவர்களுடைய நலனுக்காக பிரயாசப்பட்டு ஜெபித்து கேட்பதே நல்லதை தேடுவதற்கு சமம்.
ஒவ்வொரு நாளும் கர்த்தர் நம் வாழ்க்கை மூலியமாக பிறருக்கு தன்னை காண்பிக்கிறார். பிறருக்கு நன்மை செய்து உதவும் பொழுது அவர்கள் கர்த்தரை காண்கின்றார்கள்.
கர்த்தர் நல்லவர் எப்பொழுதும் நல்லதையே பிறருக்கு எண்ணுவார் ஒரு நாளும் தீங்கை எண்ணாதவர்.
ஆதலால் இயேசுவை ஆராதிக்கும் நாமும் இவ்வாறாக இருக்க வேண்டும்.
கர்த்தரை ஒருவரும் காண இயலாது என்பது அல்ல, அவர் நம்முளியமாய் காணப்படுகிறார், நம் நல்ல செயல்கள் மூலமாக காணப்படுகிறார்.
ஆதலால் இன்றிலிருந்து பிறருக்கு நன்மை செய்ய பிரயாசப்படுங்கள், நன்மை செய்வதற்கான சந்தர்ப்பங்களை தேடி நாடுங்கள். ஒருபோதும் தீமை எண்ணாதீர்கள். அப்பொழுது சேனைகளின் கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை வாழ வைப்பார் உங்களை ஆசீர்வதிப்பார்.