With you / கர்த்தர் உங்களோடு

They will fight against you, but they shall not prevail against you, For I am with you, says the LORD to deliver you.

Jeremiah 1:19

You may be facing giants in your life, you may be facing hurdles, you may be facing mountains preventing you to move forward and come up, struggle might have been your lifestyle.
But good news is it will not prevail, it will not withstand.
Lord Jesus Christ is with you who will fight for you.
Nothing has the power against the LORD GOD.
Hence you don't fight your battle, give it in God's hands. He loves you and He knows how to tackle the situation and the enemy.
Jesus Himself said put on my yoke and experience the rest that God gives you.
While you rest, LORD will fight your battles and give victory.
Cast your cares upon the LORD for He cares for you.

அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 1:19

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்ப்புகளை சந்தித்திருக்கலாம், நீங்கள் தடைகளை எதிர்கொண்டிருக்கலாம், நீங்கள் முன்னேறி மேலே வருவதை தடுக்கும் மலைகளை எதிர்கொண்டிருக்கலாம், போராட்டம் உங்கள் வாழ்க்கைமுறையாக இருந்திருக்கலாம்.
ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், அது வெற்றிபெறாது, மேற்கொள்ளாது, தங்காது.
உங்களுக்காகப் போராடும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களோடு இருக்கிறார்.
கர்த்தராகிய ஆண்டவருக்கு எதிராக எதற்கும் அதிகாரம் இல்லை.
எனவே நீங்கள் உங்கள் போரில் போராட வேண்டாம், அதை கடவுளின் கைகளில் கொடுங்கள். அவர் உங்களை நேசிக்கிறார், சூழ்நிலையையும் எதிரியையும் எவ்வாறு சமாளிப்பது என்பது அவருக்குத் தெரியும்.
கர்த்தரின் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
நீங்கள் இளைப்பாறும் பொழுது, கர்த்தர் உங்கள் போர்களை எதிர்த்து வெற்றியைத் தருவார்.
கர்த்தர் உங்களை விசாரிக்கிறபடியினால், உங்கள் கவலைகளை அவர் மீது வைத்துவிடுங்கள்.