Root cause / மூலகாரணம்

And she will bring forth a Son, and you shall call His name JESUS, for He will save His people from their sins.

Matthew 1:21

The name of our Lord Jesus is not a English name, but is derived from the Hebrew name Yeshua which means He saves.
Yes, that is who our Lord Jesus Christ is. He saves from sin, all those who believe in Him as Son of God and worship Him.
Sin causes all the problems and chaos in life. It is the root cause for all evil.
That is the reason Lord Jesus came to save us from sin. He took our punishment, curse and sin upon Himself and delivered us from the power of sin.
Now when you believe in Jesus sin does not have power over you, hence you are delivered from the root causes of sin, which is sickness, failure, disappointment, brokenness, hopelessness and so on.
Lord Jesus Christ came not just to save you from one or two problems, He came to completely eradicate the source of all problems which is sin.
Today if you have believed in Lord Jesus as God and worship Him, you are set free from sin and the problems and curse it brings.
In Christ you are righteous, that is sinless. When you strongly believe and live in this truth you are free from causes of sin, it has no power over you.
Jesus has saved you from the greatest of all troubles, the source of all troubles which is sin. He alone is our Savior and no other.

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

மத்தேயு 1:21

நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பெயர் ஆங்கிலப் பெயர் அல்ல, அது எபிரேய மொழியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. எபிரேய மொழியில் இயேசுவின் பெயர் யேசுவா என்று அழைக்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் இரட்சிக்கிறவர் அல்லது காப்பாற்றுகிறவர் என்று அர்த்தம்.
ஆம், அவர்தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. தம்மை இறைவனின் மகனாக நம்பி வழிபடும் அனைவரையும் பாவத்திலிருந்து காப்பாற்றுகிறார்.
பாவம் வாழ்க்கையில் எல்லா பிரச்சனைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. எல்லாத் தீமைகளுக்கும் அதுவே மூலகாரணம்.
கர்த்தராகிய இயேசு நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்க இதுவே காரணம். அவர் நம்முடைய தண்டனை, சாபம் மற்றும் பாவங்களைத் தம்மீது ஏற்றுக்கொண்டு பாவத்தின் வல்லமையிலிருந்து நம்மை விடுவித்தார்.
நீங்கள் இயேசுவை நம்பும்போது பாவத்திற்கு உங்கள் மீது அதிகாரம் இல்லை, எனவே நீங்கள் பாவத்தின் மூல காரணங்களான நோய், தோல்வி, ஏமாற்றம், முறிவு, நம்பிக்கையின்மை மற்றும் பலவற்றிலிருந்து விடுவிக்கப்படுகிறீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஓரிரு பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றுவதற்காக வரவில்லை, எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணமான பாவத்தை முற்றிலும் ஒழிக்க வந்தார்.
இன்று நீங்கள் கர்த்தராகிய இயேசுவை மெய்யான தெய்வம் என்று நம்பி விசுவாசிப்பீர்களே ஆனால், நீங்கள் பாவத்திலிருந்தும், பாவத்தின் சாபத்திலிருந்தும் விடுவிக்கப்படுகிறீர்கள்.
கிறிஸ்துவில் நீங்கள் நீதிமான்களாக பாவமற்று இருக்கிறீர்கள். இந்த உண்மையை நீங்கள் உறுதியாக நம்பி வாழும்போது, நீங்கள் பாவத்தின் விளைவுகளில்லிருந்து விடுபடுகிறீர்கள், அதற்கு உங்கள் மீது அதிகாரம் இல்லை.
எல்லாத் துன்பங்களுக்கும் மூலக் காரணமான பாவத்திலிருந்து இயேசு உங்களைக் காப்பாற்றினார். அவர் ஒருவரே நமது இரட்சகர், வேறு யாரும் இல்லை.