The Star / நட்சத்திரம்

When they saw the star, they rejoiced with exceedingly great joy.

Matthew 2:10

The story of three wise kings is very familiar to all of us. We have all read and seen it in plays many number of times, especially during Christmas.
But who are these wise kings or wise men.
They are astrologers who read the sky and the stars and find out the seasons and the times.
They have studied the sky very well and know when a star appears in the sky.
The birth of Jesus was announced to few specific group of people and one of them were the wise men.
But why the wise men, we don't really know the answer to it, but one things is sure, God reveals to anyone who is seeking Him or seeking the truth.
He reveals to them in their own place and the way they understand.
For the wise men, He revealed Himself by showing the star and drawing them closer to Him.
He does the same for you. He meets you were you are and based on your understanding.
You don't have to struggle to find Him or struggle to reach to Him.
He comes to you and reveals Himself and draws you closer to Him.
He is Immanuel, God with you, who gives hope and future. He will give you what you are looking for and make you rejoice exceedingly as the wise men.

அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.

மத்தேயு 2:10

மூன்று சாஸ்திரிகள் கதை நம் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. குறிப்பாக கிறிஸ்துமஸின் போது நாம் பலமுறை வேதத்தில் வாசித்திருக்கிறோம், நாடகங்களில் பார்த்திருக்கிறோம்.
ஆனால் யார் இந்த சாஸ்திரிகள்?
அவர்கள் வானத்தையும் நட்சத்திரங்களையும் படித்து பருவங்களையும் காலங்களையும் கண்டுபிடிக்கும் ஜோதிடர்கள்.
வானத்தை நன்றாக ஆராய்ந்து, வானத்தில் ஒரு நட்சத்திரம் எப்போது தோன்றும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.
இயேசுவின் பிறப்பு சில குறிப்பிட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டது, அவர்களில் ஒரு கூட்டம் இந்த சாஸ்திரிகள்.
ஆனால் ஏன் சாஸ்திரிகளுக்கு இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்டது? அதற்கான பதில் நமக்கு உண்மையில் தெரியாது, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இயேசு தன்னைத் தேடும் அல்லது உண்மையைத் தேடும் எவருக்கும் வெளிப்படுத்துகிறார்.
அவர் அவர்களின் சொந்த இடத்திலும் அவர்கள் புரிந்துகொள்ளும் விதத்திலும் அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
சாஸ்திரிகளுக்கு, அவர் நட்சத்திரத்தைக் காட்டி, அவர்களைத் தம்மிடம் நெருங்கி வருவதன் மூலம் தன்னை வெளிப்படுத்தினார்.
அவர் உங்களுக்கும் அவ்வாறே செய்கிறார். நீங்கள் இருக்கிற இடத்திலும் உங்களுக்கு புரிகிற வகையிலையும் தம்மை வெளிப்படுத்துகிறார்.
நீங்கள் அவரைக் கண்டுபிடிக்க போராட வேண்டியதில்லை அல்லது அவரை அடைய போராட வேண்டியதில்லை.
அவர் உங்களிடம் வந்து தன்னை வெளிப்படுத்தி உங்களை அவரிடம் நெருங்கி வரச் செய்கிறார்.
அவர் இம்மானுவேல், உங்களோடு இருக்கும் கடவுள். உங்களோடு இருந்து நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் தந்து சாஸ்திரிகளைப் போல மிகுந்த ஆனந்த சந்தோஷம் அடைய செய்வார்.