The Great Light / பெரிய வெளிச்சம்

The people who walked in darkness, have seen a great light;

Isaiah 9:2

The word darkness makes people uncomfortable. It brings thoughts about unknown, danger, fear, confusion, worry, anxiety, lack of clarity.
No one volunteers willingly to venture into darkness.
But on the other hand light brings hope, clarity, boldness, joy, protection, and much more positive attributes.
Bible says in 1 John 1:5, God is Light and in Him there is no darkness.
Lord Jesus Christ brought light into this dark world.
He is the Light and in Him there is no fear, confusion, anger, punishment, danger, but instead in Him is abundant love, joy, peace, wisdom, counsel, forgiveness, confidence, hope and all the positive attributes.
When you believe Lord Jesus Christ is the only God and fellowship with Him everyday, you also walk in the light. Jesus gives you the joy, peace, wisdom, counsel, confidence and all the goodness of life.
Start everyday praying to Him, worshiping Him and loving Him, then His light shines on you and you won't walk in darkness.

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

ஏசாயா 9:2

இருள் என்ற வார்த்தை மக்களை சங்கடப்படுத்துகிறது. ஆபத்து, பயம், குழப்பம், கவலை, பதட்டம், தெளிவின்மை பற்றிய எண்ணங்களைக் கொண்டுவருகிறது.
இருளில் இருப்பதற்கு யாரும் முன்வருவதில்லை.
ஆனால் மறுபுறம், வெளிச்சம் நம்பிக்கை, தெளிவு, தைரியம், மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் மிகவும் நேர்மறையான பண்புகளைக் கொண்டுவருகிறது.
1 யோவான் 1:5 ல் கூறுகிறது, தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த இருண்ட உலகில் வெளிச்சத்தைக் கொண்டுவந்தார்.
இயேசுவே ஒளியாய் இருக்கிறார், அவருக்குள் பயம், குழப்பம், கோபம், தண்டனை, ஆபத்து எதுவுமில்லை, மாறாக அவரிடம் அபரிமிதமான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, ஞானம், அறிவுரை, மன்னிப்பு, நம்பிக்கை, மற்றும் அனைத்து நேர்மறை பண்புகளும் உள்ளன.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே கடவுள் என்று விசுவாசித்து, தினமும் அவரிடத்தில் ஐக்கியம் கொள்ளும் பொழுது, நீங்களும் வெளிச்சத்தில் நடக்கிறீர்கள். இயேசு உங்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, ஞானம், அறிவுரை, நம்பிக்கை மற்றும் வாழ்வின் அனைத்து நன்மைகளையும் தருகிறார்.
ஒவ்வொரு நாள் ஆரம்பிக்கும் பொழுது இயேசுவிடம் ஜெபித்து அவரை ஆராதிக்கும் பொழுது அவருடைய ஒளி உங்கள் மீது பிரகாசிக்கிறது, நீங்கள் இருளில் நடக்க மாட்டீர்கள்.