Son has been given / குமாரன் கொடுக்கப்பட்டார்

For a child has been born for us; a son has been given to us.

Isaiah 9:6

For God loves you and me so much beyond our imagination. He showed His love by sending His Son Jesus Christ to take our sin and punishment and die in our place.
He raised Lord Jesus Christ from the dead and through Him has given us everything including eternal life.
Son has been given to you and for you.
Son does not prevent you from coming to the one true God, but infact Son has opened heaven and kingdom of God for you and me.
All that is of the Father in heaven belongs to us.
Whatever you ask now in the name of Lord Jesus Christ, God's only Son, it will be given to you by God the Father in heaven.
Through the Son we belong to the Father in heaven and are entitled to receive every blessing from Him.
If this much has been done for us, why not take full advantage of it?
Instead of being anxious, worrying, fearful, depressed, murmuring, complaining be thankful, rejoice in hope and ask in faith and receive what belongs to you.
Son has been given to you only to help you and give you abundant life, not just while you live here on earth but even after eternally.

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;

Isaiah 9:6

நீங்கள் எண்ணுவதற்கும் மேலாக பிதாவாகிய தேவன் உங்களை நேசிக்கிறார். தன் ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்காகத் தந்து அந்த அன்பை உறுதிப்படுத்தினார். இன்றைக்கு உங்களுக்காக குமாரன் கொடுக்கப்பட்டிருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவே அந்த குமாரன். நம்மை பாவத்திலிருந்து மீட்கவும் நமக்காக தண்டிக்கப்படவும் மரிக்கவுமே குமாரன் வந்தார்.
பிதாவாகிய தேவன் உயிரோடு இயேசுவை எழுப்பினார். அவர் மூலமாக நித்திய ஜீவனையும் தந்தருளினார். இதுவே பிதாவாகிய தேவனின் அன்பு.
இந்த குமாரன் உண்மையான கடவுளாகிய கர்த்தரிடம் வருவதற்கு தடை பண்ணுவதில்லை மாறாக கர்த்தரின் ராஜ்யத்தையும் அதில் உள்ள அனைத்தையும் உங்களுக்கும் எனக்கும் திறந்து கொடுத்தார்.
குமாரனின் மூளியமாக கர்த்தரின் அனைத்தும் நமக்குரியவைகள்.
குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதை கேட்டாலும் நாம் பெற்றுக்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம்.
இத்தனை நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் இயேசுவின் மூலமாக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்றால், ஏன் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?
ஆம் பிரியமானவர்களே கவலைப்பட்டு சோர்வில் இருந்து முறுமுறுத்து குறை சொல்வதை காட்டிலும், நன்றி நிறைந்த இருதயத்தோடு நம்பிக்கையுடன் குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக பிதாவாகிய தேவனை அணுகி விசுவாசத்துடன் கேட்டு உங்களுக்கென்று குமாரன் பெற்று தந்த ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
குமாரன் உங்களுக்காகவே கொடுக்கப்பட்டார். நீங்கள் நன்றாய் வாழ்ந்திருப்பதற்காக கொடுக்கப்பட்டார். இந்த பூமியில் இருக்கும் வாழ்நாள் மட்டுமல்ல நிரந்தரமாக நீங்கள் அவரோடு வாழ்ந்திருக்கும் படி குமாரன் கொடுக்கப்பட்டார்.
கொடுக்கப்பட்ட குமாரனை ஒவ்வொரு நாளும் ஆராதித்து அவர் மூலமாக எண்ணில் அடங்கா நன்மைகளை பெற்று வாழுங்கள்.