Power and Mercy / வல்லமையும் கிருபையும்

I will sing of Your power; Yes I will sing aloud of Your mercy in the morning.

Psalms 59:16

King David more than anybody experienced and recognized the power and mercy of God.
In most of the psalms he wrote, he does not forget to mention these two attributes of the Almighty God.
The main reason David could experience God's power and mercy more than anybody else is because he recognized his weakness and how sinful he was.
Today you too can experience the power and mercy of God everyday.
But for you to experience this blessing, you should accept your weakness and depend on Lord Jesus Christ.
You should acknowledge the sin nature and trust in God for His mercy.
When you realize and recognize the weakness, then God's power will manifest in your life. He raises up to be your defense and help you overcome any obstacle.
His mercies carries you on His shoulders.
Like David, walk every day in the strengthen of the Lord and depend on His mercies.
You will see great victories in your life.
You too like David will sing of the power of Lord Jesus Christ and sing aloud of His mercy.

நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்.
 
சங்கீதம் 59:16

எல்லோரையும் விட தாவீது ராஜா கர்த்தரின் வல்லமையையும் கருணையையும் அனுபவித்து அங்கீகரித்தார்.
அவர் எழுதிய பெரும்பாலான சங்கீதங்களில் கர்த்தரின் வல்லமையையும் கருணையையும் குறித்து எழுதி இருக்கிறதை பார்க்கிறோம்.
தாவீது கர்த்தரின் வல்லமையையும் கருணையையும் மற்றவர்களை விட அதிகமாக அனுபவிக்க முக்கியக் காரணம், அவர் தனது பலவீனத்தையும் அவர் எவ்வளவு பாவமுள்ளவர் என்பதையும் உணர்ந்துகொண்டதுதான்.
இன்று நீங்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தரின் வல்லமையையும் கருணையையும் அனுபவிக்க முடியும்.
ஆனால் இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் அனுபவிக்க, உங்கள் பலவீனத்தை ஏற்றுக்கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சார்ந்திருக்க வேண்டும்.
நீங்கள் பாவத்தின் தன்மையை ஒப்புக்கொண்டு, கர்த்தரின் இரக்கத்திற்காக அவரை நம்ப வேண்டும்.
நீங்கள் பலவீனத்தை உணர்ந்து அடையாளம் காணும்போது, உங்கள் வாழ்க்கையில் கர்த்தரின் வல்லமை வெளிப்படும். அவர் உங்களைப் பாதுகாத்து உங்களுக்கு முன்பாக சென்று கோணலான வழிகளை செவையாக்குகிறார்.
அவருடைய இரக்கம் உங்களை அவருடைய தோள்களில் சுமந்து செல்கிறது.
தாவீதைப் போல, ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய பலத்தில் நடந்து, அவருடைய இரக்கத்தைச் சார்ந்திருங்கள்.
உங்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள்.
தாவீதைப் போல நீங்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையைக் குறித்துப் பாடி, அவருடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுங்கள்.