Offer Thanksgiving sacrifice / நன்றி பலியை செலுத்துங்கள்

When you offer a sacrifice of thanksgiving to the LORD, offer it of your own free will.

Leviticus 22:29

The concept of thanksgiving evolves throughout the Bible. In the Old Testament, it is closely tied to the word "Bless" (Barakh).
While Genesis gives little evidence about offering thanks to God, Leviticus later on introduces a sacrificial system which includes thanksgiving.
Thanksgiving since then have been associated with a sacrifice.
The people of Israel when they were blessed or healed or delivered, they came to the temple of Adonai and offered a sacrifice, usually cakes made of unleavened bread.
The unleavened bread signifies purity. In the Bible, leaven is almost always symbolic of sin, hence unleavened is being holy, that is separated and living for God.
Lord Jesus Himself said in Mathew 16:6, "Watch out, and beware of the leaven of the Pharisees and Sadducees"
The Pharisees and Sadducees were following God's commandment as a tradition and not from the heart. Their heart was greedy and wicked but outside actions pretended to be holy. There was no love of God and love for others in them.
Today as you celebrate thanksgiving day, thank God with a sacrifice of symbolic unleavened bread. That is make a commitment to love God first above all and also to love others around you, even though they are not perfect. Show God's love to them. This is the true thanksgiving sacrifice.
For love covers multitude of sins.
Happy Thanksgiving.

கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.

லேவியராகமம் 22:29

நன்றி செலுத்துதல் என்ற கருத்து பைபிள் முழுவதும் இருப்பதை நாம் காண்கின்றோம். பழைய ஏற்பாட்டில், இது "ஸ்தோத்திரம்" (பாரக்) என்ற வார்த்தையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
கர்த்தருக்கு நன்றி செலுத்துவதைப் பற்றி ஆதியாகமம் சிறிய ஆதாரங்களைக் கொடுக்கிறது என்றாலும், லேவியராகமம் பின்னர் நன்றி செலுத்துவதை உள்ளடக்கிய ஒரு பலியிடுதலின் முறையை அறிமுகப்படுத்துகிறது.
அன்றிலிருந்து நன்றி செலுத்துதல் பலியிடுதலோடு செயல்பட்டது.
இஸ்ரவேல் மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டபோது அல்லது சுகமடைந்தபோது அல்லது விடுதலை பெற்ற போது, அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்து பலி செலுத்தினர், பொதுவாக புளிப்பில்லாத அப்பமே அந்த பலியாக இருந்தது.
புளிப்பில்லாத அப்பம் தூய்மையைக் குறிக்கிறது. வேதத்தில், புளிப்பானது எப்போதும் பாவத்தின் அடையாளமாக கருதப்பட்டது. எனவே புளிப்பில்லாத தன்மை பரிசுத்தத்தை குறிக்கிறது. கர்த்தருக்காக வாழ்வதை குறிக்கிறது.
கர்த்தராகிய இயேசுவே மத்தேயு 16:6 இல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
பரிசேயர்களும் சதுசேயர்களும் கர்த்தரின் கட்டளையை ஒரு பாரம்பரியமாக பின்பற்றினார்கள். கர்த்தரை முழு இருதயத்தோடு நேசிக்கவில்லை, மாறாக பாரம்பரியமாக கர்த்தரை தொழுது கொண்டார்கள். வெளிப்புறமாக பரிசுத்தமாக தோற்றமளித்தாலும் இதயத்தில் தீமை செய்கிறவர்களாய் இருந்தார்கள்.
இன்று நீங்கள் நன்றி செலுத்தும் நாளைக் கொண்டாடும் போது, புளிப்பில்லாத அப்பத்தை பலியிட்டு கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். அதாவது எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தரை நேசித்து பிறரையும் அவர்களுடைய குறையிலும் நேசிப்பதே புளிப்பில்லாத அப்பத்தை நன்றி பலியாக செலுத்துவதற்கு சமம்.
ஏனெனில் அன்பு பல பாவங்களை மறைக்கிறது.