Act that multiplies / பெருக்கத்தை கொண்டு வரும் செயல்

He took the seven loaves and the fish and gave thanks, broke them and gave them to His disciples; and the disciples gave to the multitude.

Matthew 15:36

This is the second time Lord Jesus performs this miracle. The first time it was five loaves and two fish. This time it is seven loaves and few fish, no exact quantity mentioned.
In both of these miracles Jesus first gave thanks and then gave it to eat.
This act of Jesus teaches us a great lesson.
Jesus did not grumble and complaint that He had little and not sufficient to feed the multitude.
Instead He gave thanks to God for the little He had and in faith believed God the Father will multiply it.
This is the lesson we should learn from our Lord Jesus Christ.
We should be thankful for the little. The little health, little peace, little money, little favor. Be thankful from your heart for the little.
This act will multiple the little in your life.
Luke 16:10 says whoever is faithful in the little is also faithful in much.
Yes, lets be faithful and thankful in the little and God will multiply it.

அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.

மத்தேயு 15:36

ஆண்டவர் இயேசு இந்த அற்புதத்தை நிகழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். முதல் முறை ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களையும் பெருகச் செய்தார். இந்த முறை ஏழு அப்பங்களும் சில மீன்களையும், (சரியான அளவு குறிப்பிடப்படவில்லை) பெருகச் செய்தார்.
இந்த இரண்டு அற்புதங்களிலும் இயேசு முதலில் நன்றி செலுத்தினார், பிறகு அதை உண்ணக் கொடுத்தார்.
இயேசுவின் இந்த செயல் நமக்கு ஒரு சிறந்த பாடத்தை கற்பிக்கிறது.
இயேசு முணுமுணுக்கவில்லை, திரளான மக்களுக்கு உணவளிக்க தன்னிடம் சிறிதளவு உணவு தான் இருக்கிறது என்று புகார் கூறவில்லை.
அதற்கு பதிலாக, அவர் தன்னிடம் இருந்த சிறியவற்றிற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்தினார், மேலும் பிதாவாகிய தேவன் அதைப் பெருக்குவார் என்று விசுவாசத்துடன் நம்பினார்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது.
சிறியதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். கொஞ்சம் ஆரோக்கியம், கொஞ்சம் அமைதி, கொஞ்சம் பணம், கொஞ்சம் தயவு. சிறியதற்கு உங்கள் இதயத்திலிருந்து நன்றியுடன் இருங்கள்.
இந்த செயல் உங்கள் வாழ்வில் பெருக்கத்தைக் கொண்டு வரும்.
லூக்கா 16:10 கூறுகிறது, "கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்" என்று.
ஆம், சிறியதில் உண்மையுள்ளவர்களாகவும் நன்றியுடையவர்களாகவும் இருப்போம், கர்த்தர் அதைப் பெருக்குவார்.