Thank Him with life / அவருக்கு வாழ்ந்து நன்றி செலுத்துங்கள்

He died for all, that those who live should live no longer for themselves, but for Him who died for them and rose again.

2 Corinthians 5:15

As we are approaching thanksgiving this week. This verse reminds us how we should be thankful to our Lord Jesus Christ.
We all have in different ways thanked the Lord.
We have said thanks to Him, we have testified openly and given thanks to Him, sometimes we bring a thank offering.
But in today's verse apostle Paul teaches us the greatest way of thanking the Lord, which is to live no longer for ourselves but live for Christ.
After all the life that we have is given by our Lord Jesus Christ.
He has given us eternal life and He did that by laying down His life as a sacrifice for us.
Jesus does not demand us to live our life for Him. It is an act of gratitude to the most loving God.
Loving Jesus and loving others with Christ love is living a life for Him.
Start sharing the overflowing love that you received from Jesus with others around you. May your life be a sweet smelling fragrance for people around you.
Thank Him with your precious life.

பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.

2 கொரிந்தியர் 5:15

இந்த வாரம் நன்றி செலுத்தும் வாரம். அமெரிக்கா முழுவதும் நன்றி நன்றி செலுத்துதல் கொண்டாடப்படுகிறது. பல காரணத்திற்காக பலர் இந்த வாரம் நன்றி செலுத்தக்கூடும்.
ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நாம் எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பது முக்கியம். இன்றைய வசனம் அதை கற்றுத் தருகிறது.
நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் இறைவனுக்கு நன்றி செலுத்தியுள்ளோம்.
வாயினால் அறிக்கை விட்டு நன்றி செலுத்துகிறோம், வெளிப்படையாக சாட்சியின் நிமித்தம், அவருக்கு நன்றி செலுத்தினோம், சில சமயங்களில் காணிக்கைகள் மூலமாக நன்றி செலுத்தி இருக்கிறோம்.
ஆனால் நமக்காக வாழாமல் கிறிஸ்துவுக்காக வாழ்வதே இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கான மிகப்பெரிய வழி என்று இன்றைய வசனத்தில் அப்போஸ்தலன் பவுல் நமக்குக் கற்பிக்கிறார்.
நம் ஜீவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் கொடுக்கப்பட்டது.
அவர் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறார், நமக்காகத் தம்முடைய ஜீவனைத் தியாகம் செய்து அதைச் செய்தார்.
அவருக்காக வாழ வேண்டும் என்று இயேசு நம்மைக் கட்டாயப்படுத்தவில்லை. அது நாமாக அளிக்கிற ஒரு நன்றி பலி.
இயேசுவை நேசிப்பதும், கிறிஸ்து அன்புடன் பிறரை நேசிப்பதும் அவருக்காக வாழ்வதாகும்.
இயேசுவிடமிருந்து நீங்கள் பெற்ற அன்பை உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்குங்கள். உங்கள் வாழ்க்கை உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு இனிமையான வாசனையாக இருக்கட்டும்.
உங்கள் விலை உயர்ந்த வாழ்வின் மூலம் அவருக்கு நன்றி செலுத்துங்கள்.