The seven attributes / ஏழு குணங்கள்

The LORD is my rock and my fortress and my deliverer, my god, my rock, in whom I take refuge my shield, and the horn of my salvation, my stronghold.

Psalms 18:2

David wrote this psalm after God gave him victory over all his enemies. David was chased by his enemies, mainly by king Saul for 15 years.
David was running for his life, living in caves, sometimes without food starving, suffering in extremely climates in wilderness.
At one occasion he even was pushed to act like a mad man tearing his clothes and scratching his skin to escape from the enemy king.
But Lord God was faithful to Him. The end result was glorious. All through the 15 years king David saw the seven attributes of Lord God that sustained him, which he writes in this psalm.
Yes even today Lord Jesus Christ is the same. He is your rock who provides stability, He is the fortress, your defense, He is your deliverer, He is your refuge who gives peace, He is your shield who protects you, He is the horn of your salvation who gives strength, He is your stronghold, the power that holds you.
You may have a life like David, being chased by enemies, being starved of good, living in pain, always hearing bad news.
Do not lose heart, Jesus is always with you even while you are going through the pain. He loves you and never blames you.
Jesus is with you to turn your mourning into dancing like He did for king David.
Your days to celebrate and dance are much nearer than you think.

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

சங்கீதம் 18:2

கர்த்தர் தன் எதிரிகள் அனைவரின் மீதும் வெற்றியைக் கொடுத்த பிறகு தாவீது இந்த சங்கீதத்தை எழுதினார். தாவீது தம் எதிரிகளால் முக்கியமாக சவுல் ராஜாவால் 15 ஆண்டுகள் துரத்தப்பட்டார். தன்னை கொல்ல நினைத்த எதிரிகளிடமிருந்து தாவீது ஓடினார். குகைகளிலும் பாலைவனத்திலும் வாழ்ந்தார். உணவின்மை பசி வெயிலின் கொடுமை இரவில் குளிர் காட்டு ஜீவன்கள் இப்படியான கஷ்டத்தை 15 ஆண்டுகளாக அனுபவித்தார். ஆனால் அவர் வணங்கின தேவன் அவரை கைவிடவில்லை. இறுதியில் கர்த்தர் தாவீதுக்கு பெரிய வெற்றியை கொடுத்தார்.
இந்த 15 ஆண்டுகளாக அவர் கூட இருந்த கர்த்தரின் குணத்தை போற்றி இந்த வசனத்தை அவர் எழுதினார்.
ஆம் பிரியமானவர்களே இன்றைக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இதே குணம் உள்ளவர். அவர் உங்கள் கண்மலையாய் இருக்கிறார், உங்கள் கோட்டை அவரே, ரட்சகரும் அவரே  உங்கள் நம்பிக்கையாய் இருக்கிறார், அவரே உங்கள் கேடகம்  இரட்சணிய கொம்பு  உயர்ந்த அடைக்கலம்.
நீங்களும் இன்றைக்கு தாவீதைப் போல அலைந்து திரிந்து கொண்டிருக்கலாம், வேதனையில் இருக்கலாம், தோல்வியை சந்தித்திருக்கலாம், எப்பொழுதும் கெட்ட செய்தியை கேட்டுக் கொண்டிருக்கலாம். திடன் கொள்ளுங்கள் உங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து உங்களோடு கூட இருக்கிறார். உங்கள் புலம்பலை ஆனந்த களிப்பாக மாற பண்ணுவார். உங்களை ஒருபோதும் குற்றப்படுத்தாத தேவன். உங்களை அளவில்லாமல் நேசிப்பவர்.
தாவீதுக்கு செய்தது போலவே உங்களுக்கும் நல்லதை செய்து ஆசீர்வதிப்பார்.
நீங்கள் கொண்டாடி மகிழும் நாட்கள் மிக சமீபமாய் இருக்கிறது.