God's heart / கர்த்தரின் இருதயம்

The LORD will guide you continually, and satisfy your soul in drought and strengthen you bones. You shall be like a watered garden, and like a spring of water, whose waters do not fail.

Isaiah 58:11

Isaiah chapter 58 is all about the right way of fasting. God the Father sees the heart of the person. In this chapter He clearly is not happy with the way the people of Israel behaved, especially during the time of fasting.
They were just outwardly fasting and praying, but deep within their heart they had no respect of God.
They didn't seek God's heart.
Isaiah 58 clearly tells about God's heart. It is to feed the hungry, help the poor and needy and show His loves to others.
God called this as the right fast.
The promise of knowing and doing what in God's heart, leads to this promise verse today.
The Lord will guide you and satisfy your soul in drought and strengthen your bones. You will be a watered garden.
So let's do what is in God's heart, so that we become vessel of blessing in God's hand and also enjoy His blessings in our life.

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

ஏசாயா 58:11

ஏசாயா அதிகாரம் 58 இல், சரியாக உபவாசிப்பது எப்படி என்று கர்த்தர் கற்றுத் தருகிறார். இஸ்ரவேல் மக்கள் குறிப்பாக உபவாச காலத்தில் நடந்துகொண்ட விதம் கர்த்தருக்கு மகிழ்ச்சி தரவில்லை.
அவர்கள் வெளிப்புறமாக உபவாசம் மற்றும் ஜெபம் செய்தார்கள், ஆனால் அவர்களின் இதயத்தின் ஆழத்தில் அவர்கள் கர்த்தரை மதிக்கவில்லை.
அவர்கள் கர்த்தரின் இதயத்தைத் தேடவில்லை.
ஏசாயா 58 தேவனுடைய இருதயத்தைப் பற்றி தெளிவாகக் கூறுகிறது. பசித்தோருக்கு உணவளிப்பதும், ஏழை எளியோருக்கு உதவி செய்வதும், பிறருக்குத் தன் அன்பைக் காட்டுவதும் ஆகும்.
கர்த்தர் இதைத்தான் சரியான உபவாசம் என்று அழைக்கிறார்.
இவ்வாறாக கருத்தரின் இருதயத்தின் படி நாம் நடந்து கொள்ளும் பொழுது,
அவர் உங்களை நித்தமும் நடத்தி மகா வறட்சியான காலங்களில் உங்கள் ஆத்மாவை திருப்தியாக்கி உங்கள் எலும்புகளை நிலம் உள்ளதாக்குவார், நீங்கள் நீர் பாய்ச்சலான தோட்டத்தைப் போலிருப்பீர்கள்.
கர்த்தரின் இருதயத்தின் படி நடந்து கொள்ளுவோம் அவர் ஆசீர்வாதங்களோடு வாழ்ந்திருப்போம்.