Carries you / உங்களை சுமக்கிறவர்

Even to your old age I am He, and even to gray hairs I will carry you! I have made and I will bear; Even I will carry and will deliver you.
Isaiah 46:4

Beloved in Christ. Yes that is who you are, beloved, loved, cared, carried. The verse before today's verse says that God started to carry you the moment you were formed in mother's womb.
He carries you till the end, even in your old age.
He made you and He will bear you up and will deliver you.
Today remember and realize this truth. God is NOT against you. He is for you. (Romans 8:31).
He takes care of all your need, He carries you so you don't stumble and fall.
He carries you because you don't get lost.
He carries you so that you don't get hurt.
He carries you because He loves you and rejoice doing good to you.
He carries you not one day or one week, but till your old and have grey hairs. He bears you till the end and delivers you.
You are in His safe hands. So trust the Lord Jesus, love Him with all your heart no matter what your circumstances are, praise Him, obey Him,be Like Him, do not fear, worry or be anxious.
The one who carries you will will never forsake you.

உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
ஏசாயா 46:4

கிறிஸ்துவில் பிரியமானவர். ஆம் நீங்கள் கிறிஸ்துவின் பார்வையில் பிரியமானவர்கள்,  அவரால்  நேசிக்கப்படுபவர்கள், அவரால் கவனிக்கப்படுகிறவர்கள் அவரால் சுமக்கப்படுகிறவர்கள். தாயின் வயிற்றில் நீங்கள் உருவான அந்த நொடியே கர்த்தர்  உங்களை சுமக்க ஆரம்பித்தார் என்று இன்றைய வசனத்தின் முன் வசனம் கூறுகிறது.
உங்கள் முதுமையிலும் அவர் உங்களை இறுதிவரை சுமந்து செல்கிறார்.
அவர் உங்களை உருவாக்கினார், அவர் உங்களைத் தாங்குவார், உங்களை விடுவிப்பார்.
இன்று இந்த உண்மையை நினைவில் வைத்து உணருங்கள். கர்த்தர் உங்களுக்கு எதிராக இல்லை. அவர் உங்களுக்காக இருக்கிறார் (ரோமர் 8:31).
உங்கள் தேவைகள் அனைத்தையும் அவர் கவனித்துக்கொள்கிறார், அவர் உங்களைச் சுமந்து செல்கிறார், அதனால் நீங்கள் தடுமாறி விழுவதில்லை.
கர்த்தர்  உங்களை சுமக்கிற படியால்  நீங்கள் தொலைந்து போவதில்லை.
நீங்கள்  காயமடைவதில்லை, ஆபத்தில் சிக்கிக் கொள்வதில்லை.
அவர் உங்களை நேசிப்பதினால், உங்களுக்கு நன்மை செய்வதில் மகிழ்ச்சியடைவதினால் அவர் உங்களைச் சுமக்கிறார்.
அவர் உங்களை ஒரு நாள் அல்லது ஒரு வாரம் அல்ல, ஆனால் உங்கள் வயதான மற்றும் நரைத்த முடி வரை சுமந்து செல்கிறார். அவர் உங்களை கடைசிவரை தாங்கிக்கொண்டு உங்களை விடுவிக்கிறார்.
நீங்கள் அவருடைய பாதுகாப்பான கரங்களில் இருக்கிறீர்கள். எனவே கர்த்தராகிய இயேசுவை நம்புங்கள், உங்கள் சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் அவரை முழு இருதயத்தோடு நேசியுங்கள், அவரைப் போற்றுங்கள், அவருக்குக் கீழ்ப்படியுங்கள், அவரைப் போலவே இருங்கள், பயப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள்.
உங்களை சுமப்பவர் ஒருபோதும் கைவிடமாட்டார்.