Use your authority / உங்கள் அதிகாரங்களை பயன்படுத்துங்கள்

For God has not given us a spirit of fear, but of power and of love and of a sound mind.

2 Timothy 1:7

Fear, it rules us everyday. From the time we wake up till we go to bed, fear rules us. Sometimes even in our dream fear rules us.
We become slave to fear and believe what the fear says.
Fear always tries to make bad reality.
But bible clearly says that God did not give this fear. He gave us influential power or authority.
Fear is our own nature not from God.
We don't have to live in fear all the time, we should start using what God gave us through His mighty grace.
God given authority has power over every fear.
In Jesus name when you rebuke the fear, it listens and leaves. Fear cannot stand God's power. Darkness cannot stand the light.
Today you don't have to live in a state of panic and fear, you have been delivered by God's only Son, Jesus Christ from the power of darkness and have been transferred into His Kingdom.
You are now the child of most high God. So use your God given authority every time you are attacked by fear and anxiety and live in peace.

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

2 தீமோத்தேயு 1:7

பயம், அது நம்மை தினமும் ஆள்கிறது. நாம் எழுந்தது முதல் படுக்கைக்குச் செல்லும் வரை, பயம் நம்மை ஆள்கிறது. சில நேரங்களில் நம் கனவில் கூட பயம் நம்மை ஆள்கிறது.
நாம் பயத்திற்கு அடிமையாகி, பயம் சொல்வதை நம்புகிறோம்.
பயம் எப்போதும் மோசமானதையே  நம்ப வைக்க முயற்சிக்கிறது.
ஆனால் கர்த்தர் இந்த பயத்தை கொடுக்கவில்லை என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது. அவர் பலமுள்ள அதிகாரமுடைய  ஆவியை  நமக்குத் தந்திருக்கிறார்.
பயம் என்பது கர்த்தரிடமிருந்து  வந்தது அல்ல.
எப்பொழுதும் பயத்தில் வாழ வேண்டிய அவசியமில்லை, தேவன் தம்முடைய வல்லமையான கிருபையால் நமக்குக் கொடுத்ததை நாம் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.
கர்த்தர் கொடுத்த அதிகாரம் ஒவ்வொரு பயத்தின் மீதும் வல்லமை கொண்டது.
இயேசுவின் பெயரில் நீங்கள் பயத்தைக் கடிந்துகொள்ளும்போது, அது கேட்டுவிட்டு வெளியேறுகிறது. பயம் கர்த்தரின் வல்லமையை எதிர்த்து நிற்க முடியாது. ஒளியை இருள் தாங்காது.
இன்று நீங்கள் பீதியிலும் பயத்திலும் வாழ வேண்டியதில்லை, கர்த்தரின் ஒரே மகனான இயேசு கிறிஸ்துவால் நீங்கள் இருளின் சக்தியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருடைய ராஜ்யத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் இப்போது சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். எனவே பயம் மற்றும் பதட்டம் ஆகியவற்றால் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு கர்த்தர் கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தி  மேற்கொள்ளுங்கள்.  சமாதானத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.