Blessings in waiting / காத்திருப்பதின் ஆசீர்வாதங்கள்

Blessed are all those who wait for Him.

Isaiah 30:18

Isaiah 30 from verses 19 to 26 lists all the blessings for those who wait patiently for the Lord Jesus Christ. Below are some of the blessings.
You shall weep no more, God will be gracious to you when you call Him,
your ears shall hear a word behind you saying this is the way walk in it, that is God Himself will direct you,
He will give the rain for your seed, that is He will flourish the works of your hand,
He will make you increase and eat plentiful, all your household will also eat plentiful and be satisfied,
Lord binds up your bruise and heals the wounds.
Yes beloved, waiting may seem hard, may seem forever, but it brings great blessing.
Learn to wait patiently for God and He will lift you up in due time.

அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

ஏசாயா 30:18

ஏசாயா 30 வது அதிகாரம் 19 முதல் 26 வசனம் வரை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக பொறுமையுடன் காத்திருப்பவர்களுக்கு எல்லா ஆசீர்வாதங்களையும் பட்டியலிடுகிறது. அந்த ஆசீர்வாதங்கள் என்னவென்றால்,
இனி நீ அழுதுகொண்டிராய், உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.
வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். கர்த்தர்த்தாமே உங்களை வழி நடத்துவார்.
அவர் உங்கள் விதைக்கு மழையைத் தருவார், அதாவது உங்கள் கையின் செயல்களை அவர் செழிக்கச் செய்வார்.
அவர் உங்களைப் பெருகச் செய்வார், நீங்கள் ஏராளமாகப் புசிப்பீர்கள்;
கர்த்தர் உங்கள் காயங்களைக் கட்டி, காயங்களைக் குணப்படுத்துகிறார்.
ஆம் பிரியமானவர்களே, காத்திருப்பது கடினமாகத் தோன்றலாம், என்றென்றும் தோன்றலாம், ஆனால் அது பெரும் ஆசீர்வாதத்தைத் தருகிறது.