Unload / இறக்கி வையுங்கள்

Praise the Lord, who carries our burdens day after day; he is the God who saves us.

Psalms 68:19

We all carry many burdens in life, and we may all feel many times for someone to carry our burden, someone to come to our rescue, someone who can lighten our burdens.
Today's verse it says that God Himself, carries our burdens not just for one day but every day.
Burden wearies us and makes us lose strengthen and hope.
Our Lord Jesus Christ knew the burdens of the human being, for He himself was one.
He is the one who understands us.
So today as 1 Peter 5:7 says cast your burden upon Jesus for He cares for you.
Yes do not carry your burden, thinking that is your fate, that it is because of your sin or because of a curse.
Lord Jesus has removed all your sins and curse on the cross. He does not hold you accountable for sin.
So unload you burden at Jesus feet, unload your worries, fear, anxiety at Jesus feet and walk in faith, trusting Him.
For the Lord will make all things concerning you perfect.

கர்த்தரைத் துதியுங்கள்!ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார்.தேவன் நம்மை மீட்கிறார்.

சங்கீதம் 68:19

நாம் அனைவரும் வாழ்க்கையில் பல சுமைகளைச் சுமக்கிறோம், யாராவது நம் பாரத்தை சுமந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லி பல தடவை நாம் நினைப்பதுண்டு.
இன்றைய வசனம், தேவன் தாமே, ஒரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நம்முடைய சுமைகளைச் சுமக்கிறார் என்று கூறுகிறது.
சுமை நம்மை சோர்வடையச் செய்கிறது மற்றும் வலிமையையும் நம்பிக்கையையும் இழக்கச் செய்கிறது.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனின் சுமைகளை அறிந்திருந்தார், ஏனென்றால் அவரே ஒருவராக இருந்தார்.
அவர் நம்மைப் புரிந்து கொண்டவர்.
எனவே இன்று 1 பேதுரு 5:7 கூறுவது போல், இயேசு உங்களைக் கவனித்துக் கொள்ளுகிறபடியினால் உங்கள் பாரங்களை அவரிடம் வையுங்கள்.
ஆம் பிரியமானவர்களே, பாரத்தை சுமப்பது உங்கள் விதி, உங்கள் பாவம் அல்லது சாபத்தின் காரணம் என்று நினைக்க வேண்டாம்.
கர்த்தராகிய இயேசு சிலுவையில் உங்கள் எல்லா பாவங்களையும் சாபங்களையும் நீக்கிவிட்டார். பாவத்தை உங்கள் இடத்திலிருந்து நீக்கினார்.
எனவே இயேசுவின் பாதத்தில் பாரத்தை இறக்கி, உங்கள் கவலைகள், பயம், பதட்டம் ஆகியவற்றை இயேசுவின் பாதத்தில் இறக்கி, அவரை நம்பி விசுவாசத்தில் நடங்கள்.
கர்த்தர் தாமே உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் பூரணப்படுத்துவார்.