Trouble does not stick / நீதிமானை ஒரு கேடும் ஒட்டாது.

No grave trouble will stick on to the righteous.

Proverbs 12:21

Soap by itself is not slippery but when mixed with water has the characteristics of being slippery. It does not allow any object to stick to it for a long time.
Likewise, human being is prone to trouble, it sticks to him like a magnet, but when he or she has accepted Lord Jesus Christ as their savior, mixed with Him by faith, they become slippery. Trouble cannot stick to the righteous.
Though it may try to attach itself, but since we are made righteous by faith in Lord Jesus Christ, it does not stay, it slips and falls off.
Are you facing trouble and does it seem to have stuck to you, attached to you?
Do you feel like a person who always face trouble?
Don't worry you are righteous in Christ Jesus, trouble cannot stick to you for long, it has to slip and fall.
Psalms 30:5 says weeping may endure for a night but joy comes in the morning.
So rejoice God will restore all you lost, the trouble you see today you will see no more.

நீதிமானை ஒரு கேடும் ஒட்டாது.

நீதிமொழிகள் 12:21

சோப்பு வழுக்கும் தன்மையுடையது அல்ல, ஆனால் தண்ணீரில் கலந்தால் அது வழுக்கும் தன்மை கொண்டது. எந்தப் பொருளையும் நீண்ட நேரம் ஒட்டிக்கொள்ள அனுமதிக்காது.
அதுபோலவே, மனிதனும் பிரச்சனைகளுக்கு ஆளாகிறான், அது அவனிடம் ஒரு காந்தம் போல் ஒட்டிக்கொள்கிறது, ஆனால் அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டால், பிரச்சனை அவனை ஒட்டாது. ஏன் என்றால் இயேசுவோடு விசுவாசத்தில் கலந்தபடியினால் வழுக்கும் தன்மையை பெற்றுக்கொள்ளுகிறான்.
பிரச்சனை தன்னை இணைத்துக் கொள்ள முயற்சித்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாக்கப்பட்டதால், அது நிலைத்திருக்காது, அது நழுவி விழும்.
நீங்கள் சிக்கலை எதிர்கொள்கிறீர்களா, அது உங்களுடன் ஒட்டிக்கொண்டதாகத் தோன்றுகிறதா?
நீங்கள் எப்போதும் பிரச்சனைகளை சந்திக்கும் நபராக உணர்கிறீர்களா?
மனமகிழ்ச்சியாய் இருங்கள், நீங்கள் கிறிஸ்து இயேசுவில் நீதிமான்களாய் இருக்கிறபடியினால், தொல்லைகள் உங்களிடம் நீண்ட காலம் ஒட்டாது, அது நழுவி விழும்.
சங்கீதம் 30:5 கூறுகிறது "சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்."
எனவே நீங்கள் இழந்த அனைத்தையும் கர்த்தர் மீட்டெடுப்பார், இன்று நீங்கள் காணும் பிரச்சனைகளை இனி நீங்கள் காண மாட்டீர்கள்.