Babylon's Double doors / பாபிலோனின் இரட்டை கதவுகள்

Open the double doors, so that the gates will not be shut.

Isaiah 45:1

Ancient fortress has double doors at it's entrance, which are strongly built. It weighs in tones and is usually 10 to 20 inches thick, reinforced with Iron.
Sometimes it might take days to bang it open.
The reason for such strong doors is to prevent invaders.
When king Cyrus was invading Babylon, He faced this obstacle. Babylonian kingdom had strong doors and was impossible to open when shut.
God promised king Cyrus that He will open the double doors of Babylon fortress and give the enemy into his hands.
This is the same promise that God gives you today.
You mighty be facing strong Babylon double doors in your life preventing you to inherit God's blessing.
You may have tried to open those strong double doors but have failed.
This month God is going to open the strong Babylon's double doors for you and you will walk in and inherit healing, deliverance, salvation, restoration, abundance, peace and rest.
Lord Himself will go before you and His mighty hand will save you.

அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைப்பேன்.

ஏசாயா 45:1

புராண காலத்து கோட்டையின் வாசல் கதவுகள் மிகவும் வலிமை வாய்ந்ததாய் காணப்பட்டது. கோட்டை நுழைவு கதவுகள் ரெட்டை கதவுகளாக இருந்தன. அவைகளின் எடை டன் கணக்கில் இருக்கும், 10 முதல் 20 அங்குலம் தடியாக இருக்கும்.
மூடப்பட்ட இந்தக் கதவுகளை எதிரிகள் திறப்பதற்கு பல நாட்கள் ஆகும்.
இப்படிப்பட்ட வலிமையான கதவுகள் வைக்கப்பட்டதற்கு காரணம், எதிரிகள் கோட்டைக்குள் நுழைய விடாமல் இருப்பதற்காக.
கோரேசு ராஜா பாபிலோனை கை கொள்ள வந்த பொழுது, கர்த்தர் அவனுக்கு இந்த வசனத்தை வாக்குத்தத்தமாக கொடுத்தார். கர்த்தரே அந்த வலிமையான பாபிலோனின் இரட்டை கதவுகளை திறப்பேன் என்றார்.
இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ரெட்டை கதவுகள் உங்கள் வாழ்க்கை கூறிய ஆசீர்வாதங்களை பெறவிடாமல் தடுத்து நிறுத்தக்கூடும்.
ஆனால் கர்த்தர் இதே வாக்குத்தத்தத்தை உங்களுக்கு தருகிறார்.
இந்த மாதம் கர்த்தரே உங்கள் வாழ்க்கையில் மூடப்பட்ட கதவுகளை திறக்கப் போகிறார். அதன் மூலமாக கர்த்தரின் ஆசீர்வாதம் ஆகிய சுகம் ஜீவன்
பெலன் ஆரோக்கியம் நல்ல உறவு சமாதானம் கடனின்மை செழிப்பு என்ற இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை பெறப் போகிறீர்கள்.
கர்த்தரே உங்களுக்கு முன்பாக செல்லுகிறார் அவருடைய வலுவான வலது கரம் உங்களை இரட்சிக்கும்.