Eyes and ears of the Lord / கர்த்தரின் கண்களும் செவிகளும்

For the eyes of the LORD are on the righteous, and His ears are open to their prayers;
1 Peter 3:12

Who does God see all the time? Who does He hear all the time. The answer is in today's verse.
His eyes are on the righteous and ears open to their prayers, that is you and me who have accepted Lord Jesus as our savior and worship Him.
This is the truth we need to realize every day.
From the moment we wake up till we go to bed and even during the time we are sleeping, eyes of the Lord are watching over us.
What does the Lord do watching us? Psalms 32:8 says that He guides us with His eyes.
He guides our steps, our actions, our prayers, our motives, desires and our path to make sure it is as per His will.
He guides us by hearing our prayers and answering us and telling us His will and giving the solution to the problems.
As Psalmist says in Psalms 23:3, He leads us in path of His righteousness by hearing our prayers and guiding us with His eyes.
You are not alone by yourself in this life's journey.
So everyday when you pray to Him, know this that His ears are open to your prayers to guide you with His eyes, hence ask Him advice, directions, solutions to problems, protection and so on.
He will surely answer and guide you.

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது.
I பேதுரு 3:12

கர்த்தர் எல்லா நேரத்திலும் யாரைப் பார்க்கிறார்? அவருடைய செவி  யாரிடம் கவனமாய் இருக்கிறது? பதில் இன்றைய வசனத்தில் உள்ளது.
நாம் கர்த்தராகிய இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டபடியினால்  நீதிமான்களாக  கருதப்படுகிறோம்.
ஆதலால் அவருடைய கண்கள்  நம் மீதும், அவருடைய செவி  நம்  வேண்டுதலுக்கு கவனமாய் இருக்கிறது. 
இது நாம் அன்றாடம் உணர வேண்டிய உண்மை.
நாம் எழுந்தது முதல் உறங்கும் வரையிலும், உறங்கும் நேரத்திலும் கூட கர்த்தரின் கண்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
கர்த்தர் நம்மை பார்த்து என்ன செய்கிறார்? சங்கீதம் 32:8 கூறுகிறது, அவர் தம் கண்களால் நம்மை வழிநடத்துகிறார், நமக்கு ஆலோசனை கூறுகிறார் என்று.
அவர் நம் வழிகள், நமது செயல்கள், நமது பிரார்த்தனைகள், நமது நோக்கங்கள், ஆசைகள் மற்றும் நமது பாதையை அவருடைய சித்தத்தின்படி உறுதிப்படுத்துகிறார்.
அவர் நம்முடைய ஜெபங்களைக் கேட்டு, நமக்குப் பதிலளித்து, அவருடைய சித்தத்தைச் சொல்லி, பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தந்து நம்மை வழிநடத்துகிறார்.
சங்கீதம் 23:3ல் சங்கீதக்காரன் கூறுவது போல், நம்முடைய ஜெபங்களைக் கேட்டு, தம்முடைய கண்களால் நம்மை அவருடைய நீதியின் பாதையில் வழிநடத்துகிறார்.
இந்த வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் தனியாக இல்லை.
எனவே தினமும் நீங்கள் அவரிடம் ஜெபிக்கும்போது, அவருடைய கண்கள் உங்களை வழிநடத்துகின்றன என்பதையும், உங்கள் பிரார்த்தனைகளுக்கு அவருடைய செவி திறந்திருக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள், எனவே அவரிடம் ஆலோசனைகள், வழிகள், பிரச்சனைகளுக்கான தீர்வுகள், பாதுகாப்பு மற்றும் பலவற்றைக் கேளுங்கள்.
 உங்கள் ஜெபத்தைக் கேட்டு  கர்த்தர்  தன் கண்களால் உங்களை  வழி நடத்துவார், உங்களுக்கு ஆலோசனை தருவார்.