More than lions / சிங்கங்களை விட மேலானவர்கள்

The young lions lack and suffer hunger. But those who seek the LORD shall not lack any good thing.

Psalm 34:10

Lions are the most ferocious animals. They are most disciplined and focused. No other animal is as good as young lion when it comes to hunting and targeting the prey.
They are also very tactical. They know their prey, they know when their prey will come to drink water, when they will sleep, when they will be alone.
There is very little chance, one in a thousand that they will miss the target.
But bible says in verse today that, even they will miss the target and suffer hunger and defeat, but those who seek the Lord shall not lack any good thing.
Yes dear beloved in Christ, those who seek the Lord are more than lions. They never miss the target.
Those who seek the Lord always be able to get what they want, because they only will desire what God's desires.
Those who seek the Lord will not miss their prey.
Today seek Him will all your heart, you will not miss the target, surely that you are praying for and seeking the Lord for will surely be granted to you.
Jeremiah 29:13 says when you seek the Lord truly you will find Him. When you find the Lord you find the target you are looking for.

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

சங்கீதம் 34:10

சிங்கங்கள் மிகவும் மூர்க்கமான, ஒழுக்கமான மிகவும் கவனம் செலுத்துகிற விலங்குகள். வேட்டையாடுவது மற்றும் இரையை குறிவைப்பது போன்ற விஷயங்களில் இளம் சிங்கத்தைப் போல வேறு எந்த மிருகமும் இல்லை.
அவைகளும் மிகவும் தந்திரமானவகைகள். இளம் சிங்கம் தங்கள் இரையை அரியும். தங்கள் இரை எப்போது தண்ணீர் குடிக்க வரும், எப்போது தூங்கும், எப்போது தனியாக இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.
தங்கள் இலக்கைத் தவறவிடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, ஆயிரத்தில் ஒன்று.
ஆனால் வேதாகமம் இன்றைய வசனத்தில் கூறுகிறது, அவர்களும் இலக்கைத் தவறவிட்டு, பசியையும் தோல்வியையும் அனுபவிப்பார்கள், ஆனால் கர்த்தரைத் தேடுபவர்களுக்கு எந்த நன்மையும் குறையாது.
ஆம் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கர்த்தரைத் தேடுகிறவர்கள் சிங்கங்களைவிட மேலானவர்கள். அவர்கள் இலக்கை தவறவிடுவதில்லை.
கர்த்தரை தேடுபவர்கள் எப்போதும் தாங்கள் விரும்புவதைப் பெற முடியும், ஏனென்றால் அவர்கள் கர்த்தரின் விருப்பங்களை மட்டுமே விரும்புவார்கள்.
கர்த்தரை தேடுபவர்கள் தங்கள் இரையைத் தவறவிட மாட்டார்கள்.
இன்றைக்கு கர்த்தரை முழு இருதயத்தோடு நீங்கள் தேடும் பொழுது, நீங்கள் இலக்கைத் தவறவிட மாட்டீர்கள. எதற்காக கர்த்தரை தேடுகிறார்களோ அதை கண்டடைந்து பெற்றுக் கொள்வீர்கள்.
எரேமியா 29:13 கூறுகிறது: நீங்கள் கர்த்தரைத் தேடும்போது, அவரைக் காண்பீர்கள். நீங்கள் கர்த்தரை கண்டால் நீங்கள் தேடும் இலக்கைக் காண்பீர்கள்.