The Hill / பர்வதம்

I lift up my eyes to the mountains— where does my help come from?

Psalms 121:1

In the Old Testament people went to hills, mountains and high places to worship and offer sacrifice and pray seeking God for miracle and deliverance.
Non Israelite's who worshiped idols went to such high places seeking the so called gods.
But Israelite's when to Jerusalem which is situated on top of the hill, where God's temple was and offered their prayers.
And when they did God answered their prayers and delivered them.
In those days God's presence was in the physical temple building in Jerusalem and that is why Israelite's went there to pray and offer sacrifice. They knew for sure that God will answer their prayer when they went to Jerusalem which is on a hill.
But today God made it very easy for us. We don't have to travel for a week to climb any hill or mountain or high place to offer our prayers and worship God.
God moved His temple from Jerusalem to inside of all who accepted Jesus as Lord and Savior.
We don't have to go to the hill now, we can pray right from where we are and the same God who dwelt in temple in Jerusalem is inside us and He hears our prayers and accepts our worship and does great things for us. So go to the hill, which is the prayer room in your house and pray everyday and see God do great impossible things for you.

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

சங்கீதம் 121:1

பழைய ஏற்பாட்டில், மக்கள் மலைகள், பருவதங்கள் மற்றும் உயரமான இடங்களுக்குச் சென்று வழிபடவும், பலி செலுத்தவும், அதிசயம் மற்றும் விடுதலைக்காக கடவுளைத் தேடி ஜெபிக்கவும் சென்றனர்.
இஸ்ரவேலர் அல்லாதவர்கள் உயர்ந்த இடங்களுக்கு சென்று உயிரில்லாத தெய்வங்களை வணங்கினார்கள்.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ மலை உச்சியில் இருந்த எருசலேமின் தேவாலயத்திற்கு சென்று உயிருள்ள உண்மையான கர்த்தரை வணங்கினார்கள். அப்படியாக எருசலேம் ஆலயத்திற்கு சென்று ஜெபித்த பொழுது கர்த்தர் அவர்களுடைய ஜெபத்தை கேட்டு பதில் அளித்து பெரிய அற்புதங்களை செய்தார். அந்த காலத்தில் கர்த்தருடைய பிரசன்னம் மலை உச்சியில் இருந்த எருசலேம் தேவாலயத்தில் மட்டும் தான் இருந்தது.
ஆனால் இன்றைக்கும் கர்த்தருடைய பிரசன்னம் மலை உச்சியில் இருந்த எருசலேம் தேவாலயத்தில் இருந்து இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நமக்குள் வந்தடைந்தது.
இனி நாம் பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேல் ஜனங்களைப் போல எருசலேம் தேவாலயத்திற்கு செல்லத் தேவையில்லை. எருசலேம் பருவதத்திற்குள் இருந்த கர்த்தரின் பிரசன்னம் இப்பொழுது நமக்குள் இருக்கிறது.
ஆதலால் நமக்குள் இருக்கிற கர்த்தரின் பருவதத்தை நோக்கி கூப்பிடுவோம். உங்கள் வீட்டில் இருக்கிற ஜெப அறையே இப்பொழுது அந்த பர்வதமாய் இருக்கிறது.
தினந்தோறும் இந்த ஜெப அறையாகிய பர்வதத்திற்குள் சென்று கர்த்தரை கூப்பிடுங்கள் பெரிய அற்புதத்தை பெறுங்கள்.