Mighty Savior / வல்லமையுள்ள ரட்சகர்

For the LORD your God is living among you. He is a mighty Savior. He will take delight in you with gladness. With His love, He will calm all your fears. He will rejoice over you with joyful songs.

Zephaniah 3:17

What an awesome promise and truth this verse reveals to us. Do you know who is living with you? It is Lord Himself, The Mighty Savior.
He lives with you just like how your husband or wife or children or parents live with you everyday in your house.
So why does the Lord live with us? The answer is in this verse.
He lives with us because He is delighted, excited and loves to be with us.
He lives with us to calm us from all fears, to give assurance that He is their to take care of us.
He is with us to do good to us and rejoice with joyful songs in doing good to us.
Yes, Lord sings Joyful songs and rejoices over doing good to us.
So, don't feel bad, feel discouraged. Realize that your Mighty Savior Lord Jesus Christ is living with you to give you great victories.
He is mighty to save. Enjoy and rejoice every moment with Him. Thank Him, Worship Him, and Love Him.

உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார் (மகிழ்வுடன் பாடுவார்).

செப்பனியா 3:17

இந்த வசனம் என்ன ஒரு அற்புதமான வாக்குறுதியையும் உண்மையையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. உங்களுடன் வாழ்பவர் யார் தெரியுமா? அது கர்த்தர் தாமே, வல்லமையுள்ள இரட்சகர்.
உங்கள் வீட்டில் உங்கள் கணவன் அல்லது மனைவி அல்லது பிள்ளைகள் அல்லது பெற்றோர்கள் எப்படி உங்களுடன் தினமும் வாழ்கிறார்களோ அதுபோலவே அவர் உங்களுடன் வாழ்கிறார்.
ஏன் கர்த்தர் நம்மோடு வாழ்கிறார்? பதில் இந்த வசனத்தில் உள்ளது.
அவர் நம்முடன் வாழ்கிறார், ஏனென்றால், அவர் நம்மை நேசிப்பதனால் நம்மோடு இருக்க விரும்புகிறார், அதில் மிக்க மகிழ்ச்சியும் ஆனந்தமும் கொள்கிறார்
எல்லா அச்சங்களிலிருந்தும் நம்மை அமைதிப்படுத்த அவர் நம்முடன் வாழ்ந்து நான் பார்த்துக் கொள்வேன் என்று உறுதியளிக்கிறார்.
நமக்கு நன்மை செய்ய அவர் நம்முடன் இருக்கிறார், நமக்கு நன்மை செய்வதில் மகிழ்ச்சியான பாடல்களால் மகிழ்கிறார்.
ஆம், கர்த்தர் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடுகிறார், நமக்கு நன்மை செய்வதில் மகிழ்ச்சியடைகிறார்.
எனவே, வருத்தப்பட வேண்டாம், மனச்சோர்வடைய வேண்டாம். உங்கள் வல்லமைமிக்க இரட்சகராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களுக்கு மாபெரும் வெற்றிகளைத் தருவதற்காக உங்களுடன் வாழ்கிறார் என்பதை உணருங்கள்.
அவர் காப்பாற்ற வல்லவர். அவருடன் ஒவ்வொரு நிமிடமும் இருந்து மகிழுங்கள். அவருக்கு நன்றி செலுத்துங்கள், அவரை ஆராதியுங்கள் மற்றும் அவரை நேசியுங்கள்.