God's clock / கர்த்தரின் கடிகாரம்

The Lord is not slow to do what he has promised, as some think. Instead, he is patient with you.

2 Peter 3:9

Why it is taking so long for my prayers to be answered? Why it is taking time for God to help? Why my struggle persist? Is God there? Does He know what I am going thru'?
We all have this question and struggle with it.
Delay causes us to lose hope and faith in God, we even doubt His existence.
But today's verse gives us hope and clarity. It tells us why there is a delay.
The surprising answer is, God is not delaying but we are.
God always wants to bless us, deliver us and give us what we want, but He knows our condition and our readiness to receive His blessing.
God does not want His blessing to spoil us or harm us and make us drift away from Him.
Hence He waits for us to change from inside out. While He is waiting on us, He works in us to make us love Him with all of our heart.
Once we reach that place of loving the Lord Jesus Christ with all our heart, we become ready to receive His miracle.
Because when we love Him, no matter how big the blessing is or big the deliverance is, we won't forgot Him, but rather be thankful.
God does not want the same thing happen to Israelites in wilderness happen to you. Inspite of all the great miracle they neglected, disrespected and forgot God.
God's clock is dependent on yours.

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

2 பேதுரு 3:9

என் ஜெபத்திற்கு பதில் ஏன் இன்னும் கிடைக்கவில்லை? ஏன் என் பிரச்சனை நீங்கவில்லை? கர்த்தர் இருக்கிறாரா? என் பிரச்சனை அவருக்கு தெரியுமா? என்று இப்படியான கேள்விகள் நமக்கு உண்டு.
தாமதம் நம்பிக்கையை இழக்க வைக்கிறது, கர்த்தர் இருக்கிறாரா என்று சந்தேகப்பட வைக்கிறது.
இன்றைய வேத வசனம் தாமதத்திற்கான காரணத்தை நமக்கு தெளிவாக கூறுகிறது.
ஆச்சரியமான காரியம் என்னவென்றால், கர்த்தர் நமக்கு வைத்திருக்கிற ஆசீர்வாதத்தையும் அற்புதத்தையும் தர அவர் தாமதிக்கவில்லை, நாம் அதை தாமதிக்கின்றோம்.
கர்த்தர் எப்பொழுதும் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்த விரும்புகிறார், ஆனால் நம் ஆவிக்குரிய நிலைமையையும் தயார் நிலையையும் கர்த்தர் அறிந்திருக்கிற படியினால், அவருடைய அற்புதத்தையும் விடுதலைஐயும் பெறுவதற்கு தாமதமாகுகிறது.
ஆதலால் நாம் மாறுவதற்காக கர்த்தர் காத்துக் கொண்டிருக்கிறார். நமக்குள் அவர் கிரியை செய்து கொண்டிருக்கிறார்.
நாம் கர்த்தரை முழுமனதாய் நேசித்து இருக்கும் பொழுது, அவருடைய அற்புதத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற நாம் ஆயத்தமாய் இருக்கிறோம்.
ஒருபோதும் கர்த்தர் நம் ஆத்மா அழிந்து போவதற்கு விடுவதில்லை. வனாந்தரத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்களைப் போல நாம் வழி தவறி போய் விடக்கூடாது என்ற காரணத்தினால் கர்த்தர் தம் ஆசீர்வாதத்தை தாமதிக்கின்றார்.
இன்றைக்கு கர்த்தரை முழுமனதாய் நேசித்து உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்புக்கொடுங்கள், அப்பொழுது அவரிடமிருந்து பெரிய அற்புதத்தை பெறுவீர்கள்.
கர்த்தரின் கடிகாரம் உங்களை சார்ந்திருக்கிறது.