The Book / புத்தகம்

He who overcomes shall be clothed in white garments, and I will not blot out his name from the Book of Life, But I will confess his name before My Father and before His angels.

Revelation 3:5

Life that we live on earth does not end here. We are created for eternity. In the verse today bible clearly tells us that there is a book in heaven in which names are written.
And only those whose names are written in that book are allowed entrance into heaven.
All the rest end up in the bad side of eternity.
There are numerous and millions of books written, but none is as important as this book of life.
So how does any ones name is written in the book of life.
When someone repents of their sins and accept Lord Jesus as their Savior and walk in the Spirit and not in the flesh while they live on earth.
Walk in the Spirit means, to be lead by the Spirit of God, who always leads us as per God's will.
When we love the Lord and pray and seek Him and read His Word everyday, we are lead by the Holy Spirit.
We then live for Christ and not for our self and for the world.
It is more important to make sure our names are in The Book of Life.
Matthew 24:13 says "he who endures to the end shall be saved"
So make it a priority to be lead by the Spirit. May you be clothed in white garments and your name be written in bold in The Book of Life.

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

வெளி 3:5

பூமியில் நாம் வாழும் வாழ்க்கை இத்துடன் முடிவதில்லை. நாம் நித்தியத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளோம். இன்றைய வசனத்தில், பரலோகத்தில் ஒரு புத்தகம் உள்ளது, அதில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது.
மேலும் அந்த புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள் மட்டுமே பரலோகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
மீதமுள்ள அனைத்தும் நித்தியத்தின் மோசமான பக்கத்தில் முடிவடைகின்றன.
ஏராளமான கோடிக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன, ஆனால் இந்த ஜீவ புத்தகத்தைப் போல முக்கியமானவை எதுவும் இல்லை.
ஒருவருடைய பெயர் ஜீவ புத்தகத்தில் எப்பொழுது எழுதப்படுகிறது?
தங்கள் பாவத்திற்காய் மனம் திரும்பி, கர்த்தராகிய இயேசுவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, மாம்சத்தில் நடவாமல் ஆவியில் நடக்கும் பொழுது ஒருவரின் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்படுகிறது.
ஆவியில் நடப்பது என்பது, கர்த்தரின் சித்தத்தை செய்யும்படி ஆவியானவரிடம் நம் வாழ்க்கையை ஒப்புவித்து நடப்பதே.
நாம் கர்த்தரை நேசித்து, ஜெபித்து, அவரைத் தேடும்போது, அவருடைய வார்த்தையை தினமும் வாசிக்கும்போது, நாம் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுகிறோம். பிதாவின் சித்தத்தையும் செய்கிறோம்.
நாம் கிறிஸ்துவுக்காக வாழ்கிறோம், நம்முடைய சுயத்திற்காகவும் உலகத்திற்காகவும் அல்ல.
ஜீவ புத்தகத்தில் நம் பெயர்கள் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
மத்தேயு 24:13 கூறுகிறது "முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவன் இரட்சிக்கப்படுவான்"
எனவே ஆவியானவரால் வழிநடத்தப்படுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். நீங்கள் வெள்ளை ஆடைகளை அணிந்து, உங்கள் பெயர் ஜீவ புத்தகத்தில் உறுதியாய் எழுதப்பட்டிருக்கட்டும்.