The Finest Hour / சிறந்த நேரம்

 So I’m not defeated by my weakness, but delighted! For when I feel my weakness and endure mistreatment—when I’m surrounded with troubles on every side and face persecution because of my love for Christ—I am made yet stronger. For my weakness becomes a portal to God’s power.

2 Corinthians 12:10

Weakness, it makes us lose confidence, brings discouragement, and makes us lose all hope.
In our weak moment we tend to make bad decisions and try to run away from God or blame Him for it.
But in today's verse Apostle Paul gives us a profound truth.
He says that we are made strong in our weakness and above all in our weakness we have much access to God's power than in our strength.
Weakness is good because God can exhibit His power in us.
Hence Apostle Paul rejoices in His weakness and does not feel sorrowful.
Weakness is our finest hour, it is the best time, because God's power starts to flow mightily upon us.
So don't be discouraged because you are weak, may be it is dealing with habits, sin, job, handling family. It is your finest hour, be delightful.
In your weakness ask God to pour His power upon you so you can accomplish more than you dreams.

அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.

2 கொரிந்தியர் 12:10

பலவீனம், அது நம்மை நம்பிக்கையை இழக்கச் செய்கிறது, மனச்சோர்வைக் கொண்டுவருகிறது.
நமது பலவீனமான தருணத்தில் நாம் மோசமான முடிவுகளை எடுக்கிறோம்.
மற்றும் கர்த்தரை விட்டு ஓட முயற்சிக்கிறோம் அல்லது அதற்காக அவரைக் குறை கூறுகிறோம்.
ஆனால் இன்றைய வசனத்தில் அப்போஸ்தலன் பவுல் ஒரு ஆழமான உண்மையை நமக்குத் தருகிறார்.
நமது பலவீனத்தில் நாம் பலப்படுத்தப்படுகிறோம், ஏனென்றால் கர்த்தரின் வல்லமை நம் மேல் ஊற்றப்படுவதினால்.
நம்முடைய பலவீனத்தில் கர்த்தரின் வல்லமை அதிகமாக கிடைக்கிறது.
பலவீனம் நல்லது, ஏனென்றால் கர்த்தர் தனது வல்லமையை நம்மில் வெளிப்படுத்த முடியும்.
எனவே அப்போஸ்தலன் பவுல் தனது பலவீனத்தில் மகிழ்ச்சியடைகிறார், வருத்தப்படுவதில்லை.
பலவீனமே நமது மிகச்சிறந்த நேரம், ஏனென்றால் கர்த்தரின் வல்லமை நம்மீது பலமாகப் பாயத் தொடங்குகிறது.
எனவே நீங்கள் பலவீனமாக இருப்பதால் சோர்வடைய வேண்டாம், அது பழக்கவழக்கங்கள், பாவம், வேலை, குடும்பத்தை கையாளுதல் போன்றவற்றில் இருக்கலாம். இது உங்கள் சிறந்த நேரம், மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்கள் பலவீனத்தில் கர்த்தர் தன் வல்லமையை உங்கள் மீது ஊற்றும்படி கேளுங்கள், அதனால் நீங்கள் எதிர்பார்த்து இருப்பதை விட அதிகமாக சாதிக்க முடியும்.