Light / சுதந்திரம்

God is the LORD, And He has given us light.

Psalms 118:27

What is light? It is that which exposes darkness. Imagine a world without light, imagine there is no day and it is all darkness.
Lights brings life. The sunlight brings life to our ecosystem and we enjoy all that vegetation produces because of the light.
Light gives us confidence, boldness, joy, peace.
Similarly in our spiritual life we have light and darkness.
Darkness is the uncertainty, confusion, fear, lack of life. Devil and his kingdom represent spiritual darkness.
But on the other hand God whom we worship is light. In Him is peace, joy, happiness and life.
And through Lord Jesus Christ He has given us light.
In Christ we have clarity, boldness, health, prosperity, goodness and so on.
When you walk with Christ, when you seek Him with all your heart, when you genuinely worship Him and read and obey His word, we walk in the light and we will not stumble.
God has given us the light, let use the light, let not quench the light and walk in darkness.

கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்;

சங்கீதம் 118:27

ஒளி என்றால் என்ன? அதுவே இருளை வெளிப்படுத்துகிறது. ஒளி இல்லாத உலகத்தை கற்பனை செய்து பாருங்கள்,
பகல் இல்லாத ஒரு காரியத்தை யோசித்துப் பாருங்கள்.
ஒளி உயிர் தருகிறது. சூரிய ஒளி நமது சுற்றுச்சூழலுக்கு உயிரைக் கொண்டுவருகிறது மற்றும் ஒளியின் காரணமாக தாவரங்கள் உற்பத்தி செய்யும் அனைத்தையும் அனுபவிக்கிறோம்.
ஒளி நமக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகிறது.
அதுபோலவே நமது ஆன்மீக வாழ்விலும் நமக்கு ஒளியும் இருளும் இருக்கிறது.
இருள் என்பது நிச்சயமற்ற தன்மை, குழப்பம், பயம், வாழ்க்கை இல்லாமை. பிசாசும் அவனுடைய ராஜ்யமும் ஆவிக்குரிய இருளைக் குறிக்கின்றன.
ஆனால் மறுபுறம் நாம் வணங்கும் கடவுள் ஒளி. அவரில் அமைதி, மகிழ்ச்சி, மற்றும் வாழ்க்கை உள்ளது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக அவர் நமக்கு ஒளியைக் கொடுத்திருக்கிறார்.
கிறிஸ்துவில் நமக்கு தெளிவு, தைரியம், ஆரோக்கியம், செழிப்பு, நற்குணம் மற்றும் பல உள்ளன.
நீங்கள் கிறிஸ்துவோடு நடக்கும்போது, உங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடும்போது, அவரை உண்மையாக ஆராதித்து, அவருடைய வார்த்தையைப் படித்து, கீழ்ப்படிந்து நடக்கும்போது, நாம் ஒளியில் நடக்கிறோம், தடுமாற மாட்டோம்.
கர்த்தர் நமக்கு ஒளியை தந்திருக்கிறார், ஆதலால் ஒளியை அணைக்காமல் அதை பயன்படுத்திக் கொள்வோம்.
சுதந்திரத்தில் நடவுங்கள். இயேசுவை நேசித்து, அவருடைய வார்த்தையை கீழ்ப்படிந்து, பிறரை நேசிக்கும் பொழுது, கிறிஸ்து பெற்று தந்த சுதந்திரத்தில் நாம் நடக்கக்கூடும், அவருடைய ஆசீர்வாதத்தையும் பெறக்கூடும்.