Fellowship / ஐக்கியம்

And let us consider one another in order to stir up love and good works, not forsaking the assembling of ourselves together, as is the manner of some, but exhorting one another.

Hebrews 10:24-25

From the time Holy Spirit was poured upon the apostles on the day of pentecost, church age began.
From that time onwards people from various culture and background came together for one cause, to worship the true God and Savior Lord Jesus Christ.
The other main reason they came to church was to strengthen, help, build and pray for one another.
This motive of fellowship changed now, either we don't go to fellowship or go to fellowship with different motive than what it was originally intended for.
Author of Hebrews gives us an important instruction, that is not to forsake assembling, but rather come together to exhort and encourage and pray and build one another in Christ.
This is the main agenda of Church and Fellowship.
As we are plugged into a fellowship, let's keep this in mind and in Christ strengthen and exhort one another.
Don't keep yourself away from fellowship but prayerfully join the fellowship which is in Christ. It protects and builds you and makes you stronger and gives opportunity for you to do the same to others.

மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்.

எபிரெயர் 10:24-25

பெந்தகோஸ்தே நாளில் அப்போஸ்தலர்கள் மீது ஆவியானவர் ஊற்றப்பட்ட பொழுது சபையின் காலம் துவங்கியது. அந்நாளில் இருந்து பல தரப்பினர் ஒன்று கூடி கர்த்தரை ஆராதித்தார்கள். அது மாத்திரமல்ல ஒருத்தருக்கு ஒருத்தர் உற்சாகப்படுத்தி பலப்படுத்தி ஜெபித்து ஐக்கியம் கொண்டார்கள்.
இதுவே சபை கூடுவதற்கு ஆன முக்கியமான ஒரு காரணம். இப்படிப்பட்ட ஐக்கியமே கர்த்தரின் சித்தமாகும்.
இன்றைக்கு சபை என்ற பல ஐக்கியங்கள் உண்டு, ஆனால் கர்த்தரை உண்மையாய் ஆராதித்து, ஒருவருக்கொருவர் ஜெபித்து பலப்படுவது அரிதாய் இருக்கிறது.
அதன் நிமித்தம் சிலர் சபைக்கே செல்லாமல் இருப்பதுண்டு.
ஆனால் இன்றைய வசனம் கூறுகிறது, சபை கூடுவது நல்லது என்று. கர்த்தரை உண்மையாய் ஆராதிக்கிற நேசிக்கிற சபையில் ஐக்கியம் கொள்ளுங்கள். அது உங்களை பலப்படுத்தும் உற்சாகப்படுத்தும், மற்ற விசுவாசிகள் உங்களுக்காக ஜெபிக்கக்கூடும், நீங்களும் மற்றவர்களுக்காக ஜெபிக்கக்கூடும், அது நல்வாழ்வையே தரும்.
ஆதலால் ஐக்கியத்தை விட்டு விடாதீர்கள். அது உங்களை காத்து வழி நடத்தும்.