New wineskin / புது துருத்தி

No one will put new wine into old wineskins. For the old skins would burst from the pressure.

Matthew 9:17

In the business of wine making, this principle is the most important. An old wineskin is not physically sound enough to tolerate the violence of the fermentation process.
That is why new wine is always stored in new wineskin or in new barrels.
How does this wine principle apply to our life?
A wineskin is directly linked to change.
God wants to do new things in our life, pour new blessing, but He waits until we change the wineskin from old to new, or else the new blessing will only harm us. We are the wineskin.
When we as per Romans 12:2 Don’t copy the behavior and customs of this world, but let God transform us into a new person by changing the way we think, when we seek His will, when love others, walk humbly, forgive others, and obey God's word we become new wineskin.
When we become that new wineskin, then God gives that breakthrough, performs that healing, and blesses that so that we are not only blessed but will be a vessel of blessing to others.
Be the new wineskin.

புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம்.

மத்தேயு 9:17

திராட்சை ரசம் செய்யும் தொழிலில் ஒரு முக்கியமான கொள்கை என்னவென்றால் புதிய திராட்சை ரசத்தை பழைய துருத்தியில் போடுவது இல்லை. புதிய திராட்சரசம் புளிப்பதனால் அது பழைய துருத்தியை வீணாக்கும். அதனால்தான் புதிய திராட்சை ரசத்தை புதிய துருத்தியில் வைப்பார்கள்.
இது நம்முடைய வாழ்க்கைக்கு எப்படி பொருந்தும்?
துருத்தி மாற்றத்தை குறிக்கிறது. புதிய காரியங்களை கர்த்தர் நம் ஒவ்வொரு உடைய வாழ்க்கையிலும் செய்ய நினைக்கிறார், ஆனால் அதற்கு முன்பு நாம் துருத்தியாய் இருப்பதனால், நமக்குள் இருக்கிற பழையவைகளை நாம் எடுத்துப் போட்டு புதிய மனிதனாக மாற வேண்டும் என்று காத்திருக்கிறார்.
ஏனென்றால் நாம் மாறாமல் கர்த்தர் புதிய ஆசீர்வாதத்தை கொடுத்தால் அது நம்மை பாழாக்கி விடும். நாம் புதிய துருத்தியாய் மாறும்பொழுது கர்த்தரின் புதிய ஆசீர்வாதங்கள் நமக்கு மாத்திரம் அல்ல பலருக்கும் அது பலன் உள்ளதாய் இருக்கும்.
நாம் எப்படி புதிய துருத்தியாய் மாறுவது? ரோமர் 12:2 ல், கூறியிருக்கிற படி, இந்த உலகத்தின் காரியங்களுக்கு இடம் குடாமல், ஆசைப்படாமல், கர்த்தருடைய சித்தத்தை தேடும் பொழுது புதிய துருத்தி ஆகிறோம். நாம் பிறரை மன்னிக்கும் பொழுது, அன்பு செலுத்தும் பொழுது, தாழ்மையாய் நடக்கும்பொழுது, கர்த்தருடைய சித்தத்தைத் தேடி அதை செய்யும் பொழுது, புதிய துருத்தியாய் மாறுகிறோம்.
இன்றைக்கு புதிய துருத்தியாய் மாறுவோம், புதிய ஆசீர்வாதங்களை பெறுவோம்.