The Lord Fights / கர்த்தர் யுத்தம்பண்ணுவார்

The LORD will fight for you; you need only to be still.

Exodus 14:14

Battle is not just fought by the army of many nations, we also are in battle every day. It is called spiritual battle. When we accepted Lord Jesus Christ as our savior we were transferred from kingdom of darkness to Kingdom of God. Since now we belong to the Kingdom of the most high, we have become the target of the enemy the devil.
He wages war against us everyday, not by physically attacking us, but spiritually attacking us.
He brings fear, worry, problems, sickness and make us weak and not enjoy God's goodness.
But the good news is, our Lord Jesus Christ fights our battle. His name is Yahweh Sabaoth, which means Lord of Heavens armies.
When we cry to Him for help He comes to our rescue, fights out battles and gives us the victory.
In this battle there is only one thing we need to do, which is to be still, be silent, not fight against flesh and blood, but rather be in our knees praying to God.
You always have to fight in your knees and God will battle for you and He is always victorious.
Be still and pray in your knees and know that He is God.

கர்த்தர் யுத்தம்பண்ணுவார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.

யாத்திராகமம் 14:14

தேசிய ராணுவங்கள் மாத்திரம் யுத்தம் செய்வதில்லை, நாமும் தினந்தோறும் யுத்தம் செய்கிறோம். நாம் செய்கிற யுத்தம் ஆவிக்குரிய யுத்தமாய் இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது, இருளின் ராஜ்யத்தில் இருந்து மீட்கப்பட்டு தேவனின் ராஜ்ஜியத்தின் பிள்ளைகள் ஆகிறோம்.
அந்த சமயத்தில் இருந்து சத்துருவானவன் நமக்கு எதிராய் போர் செய்கிறான். அவன் நேருக்கு நேர் யுத்தம் செய்வதில்லை, அதற்கு பதிலாக நமக்கு பிரச்சனையை கொண்டு வந்து வியாதியைக் கொண்டு வந்து நம்மை பயத்திலும் கவலையிலும் ஆழ்த்தி நம்மை தோற்கடிக்க முயற்சி செய்கிறான்.
ஆனால் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், கர்த்தரே உங்களுக்காகவும் எனக்காகவும் யுத்தம் செய்கிறார். நாம் செய்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், முழங்காலில் நின்று கர்த்தரை நோக்கி மன்றாடும் பொழுது, நம் சார்பில் கர்த்தர் யுத்தம் செய்து வெற்றியை தருகிறார்.
இன்றைக்கு முழங்காலில் நின்று யுத்தம் செய்யுங்கள் கர்த்தர் வெற்றியை தருவார்.