The Lord helps / கர்த்தர் பார்த்துக்கொள்வார்

For surely it is not angels he helps, but Abraham descendants.

Hebrews 2:16

Angels rebelled and sinned against God and were cast out of heaven and were punished. Similarly Adam and Eve sinned as well and were also cast out from the garden of Eden.
But there is a great difference between these two events. The author of Hebrews shares this important truth which is very true.
The truth is, God did not sent His Son Jesus Christ to rescue and forgive fallen angels and reconcile with them, they were banished and punished forever,
but God surely sent His Son Jesus Christ to rescue and reconcile with Abraham's descendants.
As per Galatians 3:29 when we accept Christ we become the descendants of Abraham.
God has reconciled with you and me and is always willing to help us even in this life.
He rejoices in helping us and doing good to us. God wants to surely help you. This is the truth.
John 16:24 God promised and said Ask and you shall receive and your joy will be full.
So why wait, why lose hope, the promise remains till the coming of Lord and Savior Jesus Christ.
Ask and He will surely help you and uphold you in His righteous right hand.

ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.

எபிரெயர் 2:16

பரலோகத்தில் தூதர்கள் கர்த்தருக்கு எதிராய் பாவம் செய்த பொழுது பரலோகத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டன. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பொழுதும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. ஆனால் இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரு வித்தியாசம் உண்டு.
கர்த்தர் பாவம் செய்த தூதர்களை நிரந்தரமாக தண்டித்தார், ஆனால் ஆதாம் ஏவாளின் வம்சவழியையோ நிரந்தரமாக தண்டிக்கவில்லை, அதற்கு பதிலாக தன்னுடைய ஒரே பேரான குமாரனை அனுப்பி அவர் மூலமாக தேவன் ஆபிரகாமின் சந்ததியிடம் சமாதானம் செய்து கொண்டார். கலாத்தியர் 3:29 இன் படி, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நாம் ஆபிரகாமின் சந்ததியர் ஆகிறோம். இதுதான் நமக்கு கிடைத்த ஒரு பெரிய பாக்கியம்.
கர்த்தர் என்றென்றைக்கும் அவரை ஏற்றுக் கொண்ட பிள்ளைகளுக்கு சகாயம் செய்ய விரும்புகிறார். இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட நமக்கு அவர் எப்பொழுதும் நன்மை செய்ய விரும்புகிறார். அதனால் தான் யோவான் 16:24 இவ்வாறான வாக்குத்தத்தத்தை தந்தார், கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாகும் படி பெற்றுக் கொள்வீர்கள்.
உங்களுக்கு உதவி செய்ய சர்வ வல்லமை உள்ள தேவன் காத்துக் கொண்டிருக்கிறார், ஆதலால் தயங்காமல் அவரிடத்தில் தைரியமாய் கேளுங்கள், அப்பொழுது உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தேவைகளுக்கும் கர்த்தர் உதவி செய்து உங்களை ஆசீர்வதிப்பார்.