Protect your heart / உங்கள் இருதயத்தை காத்துக் கொள்ளுங்கள்

Above all else, guard your heart, for everything you do flows from it.

Proverbs 4:23

Most law enforcement personnel today wear bulletproof vests while on duty. While those vests are usually made of tough, synthetic material, soldiers have vests with actual metal or ceramic plates covering their chests. Why is vest in the chest and not in the legs or thighs? Because a wound to the chest may result in a wound to the heart.
And a wound to the heart is rarely survived.
In Paul’s description of the Christian’s spiritual armor, he wrote that righteousness is the believer’s breastplate, that which protects the heart (Ephesians 6:14). The leather breastplate of the Roman soldier in Paul’s day has been replaced by today’s bulletproof vests, but the purpose is the same.
Righteousness denotes holiness or sinlessness.
But how are we, as sinners, able to protect our heart from Satan’s accusations of sinfulness?
By relying not on our righteousness but on the righteousness of Christ who never sinned: “For [God] made [Christ] who knew no sin to be sin for us, that we might become the righteousness of God in Him” (2 Corinthians 5:21).
Protect your heart by depending on Christ’s righteousness rather than your own, so that you not fall to enemies evil schemes but escape every trap and walk upright in blessing.

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
 
நீதிமொழிகள் 4:23

இன்று பெரும்பாலான சட்ட அமலாக்கப் பணியாளர்கள் பணியில் இருக்கும் போது குண்டு துளைக்காத மார்பணி அணிகின்றனர். அந்த மார்பணி பொதுவாக கடினமான, செயற்கை பொருட்களால்
செய்யப்பட்டு இருக்கும்.ராணுவ வீரர்களின் மார்பனியோ இரும்பினால் செய்யப்பட்டிருக்கும்.
ஏன் மார்பிற்கு இப்படியான ஒரு கவசம் தேவை? ஏன் கால் பகுதிகளிலோ இடுப்பு பகுதிகளிலோ அப்படியான கவசம் அணிவதில்லை? காரணம் மார்பில் ஒரு குண்டோ அல்லது ஈட்டியோ பாயும் பொழுது அது இருதயத்தை துளைக்கும், உயிருக்கே ஆபத்தாக முடியும்.
பவுல் அப்போஸ்தலரும் எபேசியர் 6:14 லில் நீதி என்னும் மார்க்கவசத்தை அணிந்து கொள்ளும்படியாய் நமக்கு அறிவுரை கூறுகிறார். நீதி என்னும் மார்க் கவசம் என்றால் என்ன? பாவம் இல்லாத குற்றம் இல்லாத ஒரு வாழ்க்கையே அந்த நீதி என்னும் மார்க்க வசம்.
இந்த மார்க்கவசம் நம் உள்ளான மனிதனின் இருதயத்தை பாதுகாப்பதாய் இருக்கிறது.
இப்படியான ஆவிக்குரிய மார்க்கவசத்தை அணிவது எப்படி? நம்முடைய சொந்த நீதியில் நடவாமல் இயேசுவின் நீதியில் நாம் நடக்கும்பொழுது இந்த ஆவிக்குரிய மார்க்கவசத்தை அணிகிறோம். இயேசு கிறிஸ்துவின் நீதி என்பது, அவர் நிமித்தம் நீதிமானாக்கப்பட்டது. பிதாவின் இடத்தில் செல்லும் பொழுது இயேசுவின் நிமித்தம் நீதிமானாக்கப்பட்டேன் என்று உணர்ந்து நாம் செல்லும் பொழுது, அன்றாட வாழ்க்கையை இப்படியாக உணர்ந்து நாம் நடக்கும்பொழுது, ஆவிக்குரிய மார்க்கவசத்தை அணிந்து கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம். அதனால் நம்முடைய ஆவிக்குரிய இருதயம் பாதுகாக்கப்படுகிறது, வஞ்சியாதபடி விழுந்து போகாத படி ஆசீர்வாதத்துடன் நாம் வாழ முடிகிறது. இயேசுவின் நீதியில் நடந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.