Inhabiting Praise / வாசம் செய்ய வைக்கும் துதி

But you are holy, you who inhabit the praises of Israel.

Psalm 22:3

The word inhabit means to live or dwell in a place. David who wrote this Psalm knew a very important truth. That is He needed God to dwell and be with Him. He wanted God to be on His side.
Because when God is with Him, then no body can stand against Him.
This is the same truth apostle Paul shares in Romans 8:31 "When God is for us who can be against us".
When you praise God, He comes and lives in your praises as a man of war and a mighty conqueror to fight your battles and delivery you and give you victory.
That is why David was able to take victory in every battle. No other king in Israel won so many battles like king David, because he praised God all the time.
In Psalms 34:1 David said "I will bless the Lord at all times; His praise shall continually be in my mouth."
David has set an example for us to follow. Like David, let us too praise our Lord and Savior Jesus Christ all the time. Let His praise continuously be in our mouth.
Let us make Him dwell and live in our praises and allow Him to fight our battles and give victory.
Use this secret weapon called Praise that God has given you and chase the enemy who fights against you.

இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.

சங்கீதம் 22:3

தாவீது இந்த வசனத்தின் மூலமாக நமக்கு ஒரு ஆழ்ந்த உண்மையை தெரிவிக்கிறார். அது என்னவென்றால், கர்த்தரை துதிக்கும் பொழுது அவர் நம் துதிகளில் வாசம் செய்கிறார் என்பதே. வாசம் செய்கிறார் என்பதற்கு அர்த்தம் நம்மோடு நம் துதிகளில் இருக்கிறார், வல்லமையான, மகிமையான தேவனாக இருக்கிறார் என்பது.
தாவீது நன்றாய் உணர்ந்தார், கர்த்தர் அவரோடு இருக்கும் பொழுது ஒருவரும் அவரை எதிர்த்து நிற்பதில்லை என்று.
இதைத்தான் அப்போஸ்தலர் பவுல் ரோமர் 8:31 கூறினார்.
ஆம் பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தரை துதிக்கும் பொழுது, உங்கள் துதியில் அவர் வல்லமையுள்ள மகிமையான தேவனாய் வந்து வாசம் செய்கிறார்.
தாவீதுக்கு இந்த உண்மை தெரிந்த படியினால் அவர் தேவனை எப்பொழுதும் துதித்து கொண்டே இருந்தார். சங்கீதம் 34:1 அவர் இவ்வாறாக கூறுகிறார் " கர்த்தரை நான் எப்போதும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி என் நாவில் தொடர்ந்த இருக்கும்"
தாவீது கர்த்தரை எப்பொழுதும் துதித்தபடியினால் எல்லா யுத்தங்களிலும் அவர் வெற்றி எடுத்தார். இஸ்ரவேல் ராஜாக்கள் யாரும் தாவீது யுத்தத்தில் வெற்றி எடுத்தது போல எடுக்கவில்லை ஏனென்றால் தாவீது மாத்திரமே கர்த்தரை எப்பொழுதும் துதித்தவராய் காணப்பட்டார்.
நீங்களும் தாவீதைப் போல எப்பொழுதும் கர்த்தரை துதியுங்கள், அப்பொழுது அவர் உங்கள் துதிகளில் வாசம் செய்வார், கர்த்தர் உங்கள் துதிகளில் வாசம் செய்யும் பொழுது எல்லா யுத்தங்களையும் உங்களுக்காக செய்து வெற்றியை கொடுத்து உங்களை விடுதலை ஆக்கி உங்களை ஆசீர்வாதமாக வைப்பார். துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான். துதி எடுங்கள் உங்கள் சத்ருவாகிய சாத்தானை ஓட விடுங்கள் வெற்றியைப் பெறுங்கள்.