Hidden danger / மறைந்திருக்கும் ஆபத்து

Who can understand his errors? Cleanse me from secret faults.

Psalms 19:12

A woman in Texas put up and decorated her Christmas tree. Shortly after, she heard a noise and movement in the branches. A snake was hiding. Grabbing a stick, the woman reached into the tree and pulled the snake out.
Bible compares us to a tree (Psalms 1:3) and we need to also make sure there is no hidden dangerous sins within us.
Sin opens the door for the enemy the devil to creep in and cause harm and damage.
Sin can kills us from within.
So how do we know there are hidden dangerous sins within us.
The only way to know it is by reading the Bible everyday. The Word of God brings to the surface every hidden sin within us.
Word of God is like the spiritual mirror. It will show the nature of our inner man, just like how a natural mirror shows the nature of outward man.
Don't let sin be hidden in you in any shape or form. Know it by reading God's Word, allow God's Word to cleanse you from hidden sins, so that you may live an abundant life that God has planned for you.

தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.

சங்கீதம் 19:12

டெக்சாஸில் ஒரு பெண் தனது கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அலங்கரித்துக் கொண்டிருக்கும் பொழுது, மரத்திற்குள் ஏதோ ஒன்று அசைவாடுவதை உணர்ந்தால். மரத்தின் கிளைகளை விளக்கி பார்க்கும் பொழுது, ஒரு பாம்பு உள்ளுக்குள் மறைந்து இருப்பதை அவள் கண்டால். உடனடியாக அவள் ஒரு குச்சியை எடுத்து அந்தப் பாம்பை அகற்றினால்.
வேதாகமம் நம்மை ஒரு மரத்திற்கு ஒப்பிடுகிறது (சங்கீதம் 1:3).
பாவம் எதிரியான பிசாசு உள்ளே புகுந்து தீங்கு மற்றும் சேதத்தை ஏற்படுத்துவதற்கான கதவைத் திறக்கிறது.
பாவம் நம்மை உள்ளிருந்து கொல்லும்.
அப்படியானால் நமக்குள் மறைந்திருக்கும் ஆபத்தான பாவங்கள் இருப்பதை எப்படி அறிவது.
வேதத்தை நாம் தினந்தோறும் படிக்கும் பொழுது நமக்குள் மறைந்து இருக்கிற ஆபத்தான பாவங்களை அது வெளிப்படுத்தும். அப்பொழுது நாம் அதை அறிந்து கொள்ள முடியும்.
வேத வசனங்களை வாசிக்கும் பொழுது அது நம்மை சுத்திகரிக்கிறதாயிருக்கிறது. வேத வசனங்கள் நம் பாவத்தை சுட்டிக் காண்பிக்கிறது மாத்திரம் அல்ல அதை எடுத்துப் போடுவதற்கும் நமக்கு பலனை தருகிறது.
வேத வசனம் ஒரு ஆவிக்குரிய கண்ணாடி போல, நம்முடைய உள்ளான மனிதனை அது நமக்கு காண்பிக்கும்.
இன்றைக்கு வேத வசனத்தை வாசிப்பதன் மூலமாக உங்கள் உள்ளான மனிதனை ஆராய்ந்து அறியுங்கள் மறைந்திருக்கிற ஆபத்தான பாவங்களை வெளியேற்றுங்கள் அப்பொழுது உங்களுடைய வாழ்வு மலரும் தேவனுடைய சித்தம் நிறைவேறும்.