Worship in spirit / ஆவியோடு தொழுது கொள்ளுங்கள்

God is Spirit, and those who worship Him must worship in spirit and truth.

John 4:24

Worship is a form of acknowledging the greatness. When you worship Lord Jesus Christ, you acknowledge the great things He had done for you which is the salvation.
You acknowledge the finished work of the cross.
You acknowledge that Jesus is the one true God and the only way to the Father in heaven.
You achieve this type of worship by worshiping in the Spirit and knowing the truth that Jesus is Lord.
God is Spirit and He lives inside of you.
So you don't have to only go to the temple or church to worship Him on Sundays.
You can worship Him while you are working, while you are at home, while you are in your kitchen cooking.
This form of worship is worship in spirit.
The important element of worship is truth. When you know and realize how much Jesus loves you, how much He has done for you and how much He cares for you, it drives you automatically to worship Him and thank Him and pour your heart to Him.
Any other form of worship without knowing the truth about what Jesus did for you, will only lead to worship not in spirit.
So ponder over this truth and let the truth lead you to worship Lord Jesus Christ which leads you to victory.


தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

யோவான் 4:24

ஆராதனை மகத்துவத்தை குறிக்கிறது. இயேசுவை நீங்கள் ஆராதிக்கும் பொழுது அவர் உங்களுக்கு செய்த மகத்தான காரியத்தை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள், அவர் அளித்த இரட்சிப்பை ஏற்றுக் கொள்கிறீர்கள், சிலுவையில் இயேசு செய்த காரியங்களை நினைவு கூறுகிறீர்கள்.
இப்படியான ஆராதனை ஆவியில் உணர்ந்து நாம் செய்கிற ஆராதனையாய் இருக்கிறது.
தேவன் ஆவியாய் இருக்கிறார் ஆதலால் நாம் அவரை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் ஆராதிக்காமல் மற்ற எல்லா நேரத்திலும் ஆராதிக்க வேண்டும். வீட்டில் வேலை செய்யும் பொழுது, சமையல் அறையில் இருக்கும் பொழுது, அலுவலகத்தில் இருக்கும் பொழுது நாம் அவரை ஆராதிக்கலாம்.
கர்த்தர் நமக்காக செய்த தியாகங்களை உணரும் பொழுது, அவர் நம்மை அளவில்லாமல் நேசிக்கிறார் என்ற உண்மையை அறியும் பொழுதும், நம்மை அறியாமலேயே நாம் இயேசுவை ஆராதிக்கக்கூடும். இப்படியான ஆராதனை ஆவியில் நிறைந்து ஆராதிக்கிற ஒரு ஆராதனையாய் இருக்கிறது.
இன்றைக்கும் இப்படியாக இயேசு உங்களை நேசிக்கிறார் என்ற அந்த சத்தியத்தையும், உங்களுக்காக ஜீவனை விட்டார் என்ற உண்மையையும் உணர்ந்து அவரை ஆராதியுங்கள். இப்படியான ஆராதனை உங்களுக்கு வெற்றியை தரும்.