Fig does not blossom / அத்திமரம் துளிர்விடாமற்போனாலும்

O Lord, how long shall I cry, and You will not hear?

Habakkuk 1:2

The book of the prophet Habakkuk contains three chapters. In the first two, Habakkuk complained about his nation. He was discouraged.
But the Lord told him to trust and said the just must live by faith (Habakkuk 2:4). In the final chapter, Habakkuk responded by composing a hymn.
He rejoiced in God’s splendor and glory, and he said that even if the fig didn’t blossom or the fields yield food, he would still rejoice in the Lord.
He ended by saying, “The Lord God is my strength; He will make my feet like deer’s feet, and He will make me walk on my high hills” (Habakkuk 3:19).
Like Habakkuk, we sometimes question what God does or what He doesn’t do. Yet we must walk by faith, remembering who He is and how He works.
Meditating about God’s character and all the good things He has done can help us remember He has a plan.
In all hard situations, ask God to help you take things one step at a time, standing on the firm foundation of His love.
When you take a stand and say even if fig does not blossom, I will still put my trust in Him, this is the breakthrough for your miracle.

கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே!

ஆபகூக் 1:2

ஆபகூக் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் மூன்று அதிகாரங்கள் உள்ளன.
முதல் இரண்டில், ஆபகூக் தன் தேசத்தைப் பற்றி குறை கூறினார். அவர் மனம் தளர்ந்து போனார்.
ஆனால் கர்த்தர் அவனை நம்பும்படி சொல்லி, நீதிமான் விசுவாசத்தினால் பிழைக்க வேண்டும் என்றார் (ஆபகூக் 2:4).
கடைசி அதிகாரத்தில், ஆபகூக் ஒரு பாடலை இயற்றுவதன் மூலம் பதிலளித்தார்.
அத்தி துளிர்விடாமற்போனாலும் அல்லது வயல்கள் உணவு கொடுக்காவிட்டாலும், அவர் இன்னும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியடைவார் என்று கூறினார்.
அவர் இவ்வாறு கூறி முடித்தார், "கர்த்தராகிய ஆண்டவர் என் பெலன்; அவர் என் கால்களை மானின் கால்களைப்போல் செய்து, என் உயர்ந்த மலைகளின்மேல் என்னை நடக்கப்பண்ணுவார்" (ஆபகூக் 3:19).
ஆபகூக்கைப் போலவே, கர்த்தர் என்ன செய்கிறார் அல்லது என்ன செய்யவில்லை என்று சில சமயங்களில் நாம் கேள்வி எழுப்புகிறோம். ஆயினும் நாம் விசுவாசத்தோடு நடக்க வேண்டும், அவர் யார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கர்த்தரின் குணாதிசயங்கள் மற்றும் அவர் செய்த அனைத்து நல்ல விஷயங்களையும் பற்றி தியானிங்கள், அது கர்த்தர் மேல் விசுவாசம் வைக்க உதவும்.
கஷ்டமான நேரத்தில் கர்த்தர் பெலன் கொடுக்கும் படியாய் வேண்டிக் கொள்ளுங்கள்.
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் நான் கர்த்தரை நம்புவேன் என்று நீங்கள் உறுதியாய் நிற்கும் பொழுது வெற்றியை காண்பீர்கள். உங்களுடைய விசுவாசம் தளர்ந்து போகாமல் இருப்பதாக.