How to have success? / எப்படி வெற்றி பெறுவது

This Book of the Law shall not depart from your mouth, but you shall meditate in it day and night, that you may observe to do according to all that is written in it. For then you will make your way prosperous, and then you will have good success.

Joshua 1:8

This verse was an important instruction give to Joshua, after he took over the leadership of over 1 million Israelite's. God said to Joshua, if you have to be successful in leading the people of Israel, you have to meditate on the law day and night and observe to do according all that is mentioned in it.
Joshua indeed followed and obeyed this instruction. We know it for sure, because he was successful in leading the people of Israel, he was successful in leading Israelite's to victory in battles.
Like Joshua, God also asks you and me to follow this same commandment in order to be successful.
Like Joshua we also face battles, challenges, situations and we need God's help and direction.
We can only get help and direction from God, when we read His word every day and carefully observe and understand what it says and obey and do it.
When we do as per God's word, we avoid getting into most of the troubles in life.
Also if we get into a trouble, God's word will get us out.
So why wait, claim this promise and start your journey from today and be successful in your life.

இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.

யோசுவா 1:8

கர்த்தர் யோசுவாவுக்கு கொடுத்த முக்கியமான கட்டளை இதுவாகும். யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த துவங்கினார். அப்பொழுது கர்த்தர் யோசுவாவை பார்த்து, நீ வெற்றியுடன் ஜனங்களை வழி நடத்த வேண்டும் என்றால, பிரமாணத்தில் எழுதி இருக்கிறதை இரவும் பகலும் தியானித்து அதில் சொல்லி இருக்கிற படி நடந்து கொள் என்றார்.
யோசுவாவும் அதன்படியே பிரமாணத்தை கைக்கொண்டார், பல யுத்தங்களில் வெற்றி எடுத்தார்.
நாமும் யோசுவாவை போல யுத்தங்களையும் போராட்டங்களையும் சந்திப்பது உண்டு, யோசுவாவை போலவே நாமும் தேவ வார்த்தையை படித்து தியானித்து அதில் சொல்லியிருக்கிற கட்டளைகளை கவனமாய் கைக்கொள்ளும் பொழுது நாமும் ஜெயம் எடுக்கக்கூடும்.
கர்த்தருடைய வசனத்தை நாம் தியானித்து அதில் சொல்லி இருக்கிற படி நடக்கும் பொழுது பல பிரச்சனைகளில் இருந்து நாம் தப்பிக்க கூடும். ஒரு வேலை பிரச்சனைக்குள் நாம் இருப்போமே ஆனால், கர்த்தருடைய வசனம் நம்மை விடுவிக்கும்.
ஆதலால் எதற்காய் காத்திருக்கிறீர்கள், இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை இரவும் பகலும் தியானிக்க துவங்குங்கள், வெற்றியோடு ஜீவித்திருங்கள்.