How is your ground? / உங்கள் நிலம் எப்படி இருக்கிறது?

But he who received seed on the good ground is he who hears the word and understands it, who indeed bears fruit and produces: some a hundredfold, some sixty, some thirty.”

Matthew 13:23

In Matthew's gospel chapter 13, our Lord Jesus mentions a very important truth to receiving God's blessing in our life and He also mentions what hinders and steels our blessing.
The most important thing to receive God's blessing is the ground which is our heart.
Lord Jesus tells us about four types of ground.
1. ground with no understanding 2. Hard ground 3. ground with thorns 4. good ground
Ground with no understanding means a heart with lack of interest towards God.
Hard ground is the heart which does not want to compromise and only looks for blessing rather than the Blesser.
Thorny ground is the heart which is filled with desires of the world and hence chokes God's blessing.
A good ground is the one which longs for God's love, willing to compromise, hates the worldly things.
God's Word (the seed) produces great blessings in their life.
How is your ground? If you want God's blessing of peace, restoration, healing, deliverance, then check your ground (your heart) to see if lacks interest towards God, if it is hard, if it has thorns. Till your ground and then sow God's word in it and enjoy the fruit it produces in your life.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

மத்தேயு 13:23

மத்தேயு 13ஆவது அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவருடைய ஆசீர்வாதத்தை பெறுவதற்கான மிக முக்கியமான ஒரு உண்மையை நமக்கு கற்றுக் கொடுக்கிறார். இதே அதிகாரத்தில் நம் வாழ்க்கையில் என்ன காரியங்கள் கர்த்தருடைய ஆசீர்வாதத்திற்கு தடையாய் இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.
கர்த்தரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு முக்கியமான பொருள் நிலம். அதாவது நம்மளுடைய இருதயம்.
நான்கு வகையான நிலத்தை கர்த்தர் சொல்லியிருக்கிறார்.
1. உணராத நிலம் 2. கற்பாறையான நிலம் 3. முள்ளுள்ள நிலம் 4. நல்ல நிலம்.
உணராத நிலம் என்பது கர்த்தர் மேல் வாஞ்சையாய் இல்லாத ஒரு இருதயம், ஆதலால் அது கர்த்தரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு வாஞ்சை இல்லாமல் இருக்கிறது. கற்பாரையான நிலம் ஆசீர்வாதத்திற்கு மாத்திரம் கர்த்தரை தேடுகிறதாய் இருக்கிறபடியினால் கர்த்தரின் ஆசீர்வாதம் அந்த நிலத்தில் தங்குவதில்லை. முள்ளுள்ள நிலம் உலகத்தின் காரியங்களுக்கு வாஞ்சியாய் இருக்கிறபடியினால் கர்த்தரின் ஆசீர்வாதத்தை தடுக்கிறது. ஆனால் நல்ல நிலமோ வாஞ்சையுடன் கர்த்தரை நேசித்து உலகத்தை வெறுத்து இருக்கிறபடியினால் கர்த்தரின் ஆசீர்வாதத்தை பெறுவது மாத்திரமல்ல அந்த ஆசீர்வாதம் பெருகுவதற்கும் இடம் கொடுக்கிறது.
உங்கள் இருதயம் எப்படியாய் இருக்கிறது? கர்த்தரின் ஆசீர்வாதமாகிய சமாதானம் சந்தோஷம் விடுதலை சுகம் இதை பெற வேண்டும் என்றால் உங்கள் நிலத்தில் இருக்கிற முள் செடிகளை எடுத்துப்போட்டு கர்த்தர் மேல் வாஞ்சையை வைத்து அவருடைய வார்த்தையை தினந்தோறும் இருதயத்தில் வேரூன்ற செய்யுங்கள். அப்பொழுது கர்த்தரின் ஆசீர்வாதம் உங்கள் வாழ்க்கையில் பழகி பெறுகிறதாய் இருந்து உங்களை வாழ வைக்கும்.