Open the gate / கதவை திரவுங்கள்

The Spirit of the LORD came upon David from that day forward.

1 Samuel 16:13

Both in the Old testament and in the New testament we read and understand that when the Spirit of the Lord comes upon somebody, they were able to do mighty things and take victory.
King David was the greatest king of Israel, who won every battle and established his kingdom strongly.
That was because we read in today's verse that the Spirit of the LORD came upon Him from the time Samuel anointed him.
Today the Spirit of the Lord comes upon us when we are in His presence.
When we worship the Lord Jesus with all of our heart, His presence enables the Spirit of the Lord to come upon us.
The result of the Spirit of the LORD coming upon us is victory in every battle, strength in our weakness, knowledge and wisdom, boldness, abundance, revelation, anointing and so on.
This is what we see happen to all those upon whom the Spirit came upon.
Today open the gate to allow the Spirit of the LORD to come upon you. When you worship Him with a true loving heart, you open that gate for Spirit of God to be poured upon you.

அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்.

I சாமுவேல் 16:13

பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும், கர்த்தருடைய ஆவி யாரோ ஒருவர் மீது வரும்போது, அவர்கள் வல்லமையுள்ள காரியங்களைச் செய்து, வெற்றியைப் பெற முடிந்தது என்பதை நாம் படித்து புரிந்துகொள்கிறோம்.
தாவீது ராஜா இஸ்ரவேலின் மிகப் பெரிய ராஜாவாக இருந்தார், அவர் ஒவ்வொரு போரையும் வென்று தனது ராஜ்யத்தை வலுவாக நிறுவினார்.
அதற்குக் காரணம், சாமுவேல் அவரை அபிஷேகம்பண்ணிய காலத்திலிருந்து கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் வந்ததாக இன்றைய வசனத்தில் வாசிக்கிறோம்.
இன்று நாம் கர்த்தருடைய பிரசன்னத்தில் இருக்கும்போது அவருடைய ஆவியானவர் நம்மீது வருகிறார்.
கர்த்தராகிய இயேசுவை நாம் முழு இருதயத்தோடும் ஆராதிக்கும்போது, அவருடைய பிரசன்னம் கர்த்தருடைய ஆவி நம்மீது வருவதற்கு உதவுகிறது.
கர்த்தரின் ஆவியானவர் நம் மீது வரும் பொழுது நாம் எல்லாவற்றிலும் வெற்றி எடுக்கக்கூடும், பலத்தை அடையக் கூடும், உற்சாகத்தை பெறக்கூடும்,, தைரியத்தை பெறக்கூடும் அபிஷேகத்தை பெறக்கூடும்.
கர்த்தருடைய ஆவி உங்கள்மேல் வர அனுமதிக்க இன்று கதவை திரவுங்கள்.
தேவனை உண்மையாய் நீங்கள் ஆராதிக்கும் பொழுது ஆவியானவர் வருவதற்கு கதவை நீங்கள் திறக்கக்கூடும்.