Intercession / மன்றாட்டின் ஜெபம்

And the LORD restored Job's losses when he prayed for his friends. Indeed the LORD gave Job twice as much as he had before.

Job 42:10

Praying for others draws the attention of our Lord Jesus Christ. That too praying for those who persecute you or mocked you or have done wrong to you.
During his worst part of his life, Job's friends came and accused him of doing wrong.
They heaped accusations against him and were angry at Job.
Instead of consoling Job and encouraging him, his friends mocked at him and said it is a curse that he lost everything.
There was nothing good in his friends that helped Job.
But inspite of their worse attitude, Job prayed for his friends, asking God to forgive them. And when he did, LORD restored Job's losses double.
You and me are expected to do the same. We should not hold grudges against anyone, we should not carry bitterness and hatred against anyone.
These causes us harm to our self.
But when we forgive and pray for others who have hurt us and done harm to us, God forgives us and restores our life double.
Intercession is the key to open restoration is our lives.

யோபு தன் நண்பனுக்காக வேண்டுதல் செய்தபோது, யெகோவா அவனுடைய சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைவிட இரண்டுமடங்காகக் யெகோவா அவனுக்குத் தந்தருளினார். '

யோபு 42:10

பிறருக்காக நாம் ஜெபிக்கும் பொழுது தேவன் நம் மீது நோக்கமாய் இருக்கிறார். அதிலும் , தவறு செய்தவர்களுக்காகவும், தீங்கு செய்தவர்களுக்காகவும், ஏமாற்றினவர்களுக்காகவும், நாம் ஜெபிக்கும் பொழுது, கர்த்தர் அதில் மிகவும் பிரியமாய் இருக்கிறார்.
தனது துயரமான நாட்களில் யோபுவின் நண்பர்கள் யோபுவை பார்த்து நகைத்தனர், குற்றம் சாட்டினர், யோபுவின் இழப்பு ஒரு சாபம் என்றனர். யோபுவை தேற்றுவதற்காக வந்த நண்பர்கள் யோபுவை கடிந்து கொண்டனர்.
அப்படியான நண்பர்களை யோபு மன்னித்து அவர்களுக்காக தேவனிடத்தில் மன்றாடினார். அப்பொழுது கர்த்தர் யோபு இழந்த அனைத்தையும் இரண்டு மடங்காய் ஆசீர்வதித்தார்.
நீங்களும் நானும் இப்படியாக நமக்கு எதிராய் இருப்பவர்களுக்கும், தீங்கு செய்பவர்களுக்கும் ஜெபிக்க வேண்டும் என்பது தேவனின் சித்தம். அவர்கள் மீது எரிச்சலோ கோபமோ கசப்போ வைத்திருப்பது தேவனுக்கு பிரியம் இல்லாத ஒரு காரியம். அது நம்மை பாதிக்கிறதாய் இருக்கிறது.
ஆனால் இப்படிப்பட்டவர்களுக்காக மன்றாடி நாம் ஜெபிக்கும் பொழுது, பிறருக்காக ஜெபிக்கும் பொழுது, தேவன் நம் தேவைகளை இரட்டிப்பாக சந்திக்கிறவராய் இருக்கிறார். மன்றாட்டின் ஜெபத்தை ஏறெடுங்கள், தேவனை திருப்தி ஆக்குங்கள்.