Make a sanctuary / பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குங்கள்

And let them make Me a sanctuary that I may dwell among them.

Exodus 25:8

Lord God spoke to Moses and said make Me a sanctuary that I may dwell among them.
The sanctuary Moses and the Israelite's made was built out of fine linen, gold, animal skin.
God's mighty presence came to dwell among them when they built the sanctuary as God instructed.
When God's mighty presence dwell among the Israelite's none of them fell sick, none of them lacked anything, none of them where hungry, God Himself provided for them, He came as pillar of cloud by day and gave them shade from the hot sun and pillar of fire at night and gave them warmness from the cold of the dessert.
All this was possible because Israelite's made a sanctuary to the Lord so He can dwell with them.
Today this same promise is for you and me. Lord God is instructing us to build a sanctuary so He can come and dwell with us.
But the sanctuary is not a physical structure, but when we worship Him daily, when we seek Him daily, when we obey and walk with Him daily, when we pray daily and read His Word, we build the sanctuary for Him to come and dwell among us. When He is with us, when His presence is with us, there will be no lack, sickness is healed, He will be our protection and He will be our provider and so on.
So why wait, make a sanctuary to the Lord so that He can dwell with you and bless you.

அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக.

யாத்திராகமம் 25:8

கர்த்தராகிய ஆண்டவர் மோசேயிடம் பேசி, நான் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் குடியிருக்க ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குங்கள் என்றார்.
அந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிந்து இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை கட்டினார்கள். அதற்கு பிற்பாடு தேவனுடைய வல்லமையான பிரசன்னம் அவர்கள் மத்தியில் இறங்கியது. தேவனுடைய பிரசன்னம் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இருந்தபடியாள் அவர்கள் ஒருவரும் வியாதிப்பட்டு இல்லை, ஒருவரும் எந்த ஒரு தேவையுடன் இல்லை, தேவனே அவர்களுடைய தேவைகளை அவர் சந்தித்தார்.
தேவனே அவர்கள் மத்தியில் பகலில் மேகஸ்தம்பமாயம் இருந்து நிழலை கொடுத்தும் இரவில் அக்கினி தூணாய் இருந்து வெப்பத்தையும் கொடுத்தார்.
இன்றைக்கும் தேவனாகிய கர்த்தர் உங்கள் நடுவில் வந்து வாசமாய் இருக்க வாஞ்சிக்கிறார்.
நீங்களும் இஸ்ரவேல் ஜனங்களை போல ஒரு பரிசுத்த ஸ்தலத்தை தேவனுக்காக உண்டாக்கும் பொழுது அவருடைய பிரசன்னம் உங்கள் மத்தியில் வந்த இறங்கும்.
இஸ்ரவேல் ஜனங்களைப் போல ஒரு கட்டிடத்தை நீங்கள் எழுப்பத் தேவையில்லை.
நீங்கள் தினந்தோறும் தேவனை ஆராதிக்கும் பொழுதும், அவரோடு ஐக்கியம் கொள்ளும் பொழுதும், ஜெபிக்கும் பொழுதும் வேதத்தை வாசித்து கீழ்ப்படிந்து நடக்கும் பொழுதும், அவருக்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தை நீங்கள் உண்டாக்குகிறீர்கள்.
அப்படியாக நீங்கள் உண்டாக்கும் பொழுது தேவனுடைய பிரசன்னம் உங்கள் மத்தியில் இருந்து உங்களை பாதுகாக்கிறதாயும், உங்கள் தேவை சந்திக்கிறதாயம், உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுதலை தருகிறதாயும், வியாதியிலிருந்து சுகம் தருகிறதாயும் காணப்படுகிறது. ஆதலால் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குங்கள், அவருடைய பிரசன்னம் உங்கள் மத்தியில் இருக்க செய்யுங்கள்.