The Heir / உரிமையாளர்கள்

You are no longer a slave but a son and if a son then an heir of God through Christ.

Galatians 4:7

Through the inspiration and revelation given by Holy Spirit, Apostle Paul shares with us an unimaginable truth. In Galatians 3:26 he says that we are sons and daughters of God through faith in Christ Jesus.
When we are saved, that is repent and believe that Jesus Christ is Lord and Savior, we are adopted into God's family and become His sons and daughters.
Our status changed from being a slave to sin to being sons and daughters of most High God.
Hence we become the heir of God through Christ.
What does heir mean? It means that we are the legal owner of everything that father or mother owns. We are the legal owner of all their assets.
The greatest asset is Holy Spirit which is not given to us as well.
Other assets of our heavenly Father are peace, joy, abundance, health, goodness, and all that is in the Kingdom of God.
So why wait. Claim your asset. Don't not approach Father in heaven as a slave begging to be healed, begging to be blessed, begging for restoration, and peace.
Approach Him as a son or a daughter, approach Him as a heir and ask with full rights and get what belongs to you.
Jesus said Ask and you will receive and your joy will be full.

ஆகவே இனியும் நீங்கள் அடிமைகள் அல்ல, மகன்களாய் இருக்கிறீர்கள்; நீங்கள் மகன்களாய் இருப்பதனால், இறைவன் உங்களை உரிமையாளர்களாயும் ஆக்கியிருக்கிறார்.

கலாத்தியர் 4:7

ஆவியானவரின்  வெளிப்பாட்டின் மூலமாக  பவுல் அப்போஸ்தலர் ஒரு மிக முக்கியமான உண்மையை நமக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.  அது என்னவென்றால்  நாம் மனம் திரும்பி இயேசுவை  சொந்த இரட்சகராக  ஏற்றுக் கொண்ட போது  நாம்  தேவனின் பிள்ளைகளாய்  மாறியிருக்கிறோம் என்பதே. இதை கலாத்தியர் 3:26  இல் எழுதி இருக்கிறார்.
  பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து  தேவன் நம்மளை மீட்டெடுத்து  அவருடைய மகனாகவும் மகளாகவும்  ஏற்றுக் கொண்டார்.    
  நாம் தேவனின் பிள்ளைகளாக மாத்திரம்  மாறிவிடவில்லை  அவருடைய சொத்துக்கு   உரிமையாளர்ஆகினோம்.
  தேவனுடைய  சொத்து  எவை?   மிக முக்கியமான சொத்து ஆவியானவரே,  அவரை நாம் பெற்றுக் கொண்டோம்,  அது மாத்திரமல்லாமல்  சமாதானம் சந்தோஷம்  சுகம் என்ற பல நன்மைகளையும்  பரலோக ராஜ்ஜியத்தில் இருக்கிற பல ஆசீர்வாதமான சொத்துகளுக்கும் நாம் உரிமையாளர்களானோ.
  நீங்கள்  தேவனின்  சொத்துக்கு உரிமையாளர்கள்.
  ஆதலால்  நீங்கள் தேவனிடத்தில் அணுகும் பொழுது  ஒரு அடிமையைப் போல அவரிடத்தில் வராதபடி  ஒரு அடிமையைப் போல ஆசீர்வாதத்திற்கு அவரிடத்தில் கெஞ்சாதபடி,  ஒரு மகனாக மகளாக  தேவனுடைய சொத்துக்கு உரிமையாளர்களாக அவரிடத்தில் அணுகி  உரிமையுடன்  கேளுங்கள்.  உங்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த சொத்தாகிய சுகம் ஜீவன் ஆசீர்வாதம்  என்ற  காரியங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
  இயேசு இவ்வாறாக கூறினார், கேளுங்கள் அப்பொழுது  உங்கள் சந்தோஷம் நிறைவாகும் படி பெற்றுக் கொள்வீர்கள்.