Walking in the Light / ஆபிரகாமின் விதை

But if we walk in the light as He is in the light, we have fellowship with one another, and the blood of Jesus Christ His Son cleanses us from all sin

1 John 1:7

Light what it is? The basic definition of light is, that which exposes darkness, that in which there is no darkness, that which removes darkness.
In biblical and spiritual terms, light is truth, gentleness, patience, kindness, love, not selfish, not greedy, not lying, thinks always good of others.
We are called to walk this way, because our Lord Jesus walks the same way. He walks in love, kindness, patience, selfless, in truth.
When we walk like Jesus walks, then we have a deep intimate fellowship with Him and we are cleansed from all sins everyday.
Sin does not have hold on us and hence we enjoy God's abundance blessing.
When you walk in the light there is also clarity in life, dangers are exposed and God's plan and purposes becomes clear in your life.
Walk in the Light and enjoy the fellowship with Lord Jesus Christ.

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

1 யோவான் 1:7

ஒளி என்றால் என்ன? ஒலி என்றால் இருளை நீக்குகிற ஒன்று, ஒளி என்பது இருளை மேற்கொள்வது, ஒளி என்பது இருளில் இருக்கிற காரியங்களை வெளிப்படுத்துவது.
வேதத்தின் அடிப்படையில் ஒளி என்பது உண்மை பொறுமை சாந்தம் இச்செய அடக்கம் பொறாமை கொள்ளாமல் இருப்பது, இச்சிக்காமல் இருப்பது, சுயநலமாய் இல்லாமல் இருப்பது என்பதே.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இவ்வாறாக ஒளியில் நடக்கிறவராய் இருக்கிறார். அவர் அன்புடையவராயும் பொறுமையுடையவராயும் சாந்தமுடையவராயும் இச்சியாதவராயும் சுயநலமாய் இல்லாதவராயும் இருக்கிறார்.
நாமும் அவ்வாறாக நடக்கும் பொழுது இயேசு கிறிஸ்துவோடு ஐக்கியம் கொள்ளுகிறோம், அது மாத்திரமன்றி நம்மளுடைய சகல பாவங்களையும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நீக்குகிறது.
ஒளியில் நடக்கும் பொழுது பாவம் இல்லாதவர்களாக காணப்படுகிறோம். பாவத்திற்கு நம் மீது அதிகாரம் இல்லாமல் போகிறது.
அது மாத்திரமல்ல ஒளியில் நடக்கும் பொழுது வாழ்க்கையில் ஒரு தெளிவு இருக்கும், குழப்பங்கள் நீங்கும், ஆபத்துகள் தெரியும், கர்த்தருடைய திட்டங்களை நாம் அறிவோம்.
ஆதலால் இன்று ஒளியில் நடப்போம் இயேசு கிறிஸ்துவின் ஐக்கியத்தை ருசி பார்ப்போம்.