Abraham's Seed / ஆபிரகாமின் விதை

If you belong to Christ, then you are Abraham’s seed, and heirs according to the promise.

Galatians 3:29

God promised Abraham in Genesis 22:18 that through his seed all the nations of the earth shall be blessed, because he obeyed God's voice.
Apostle Paul explains the really meaning of this verse. The seed mentioned in Genesis 22:18 is Christ Himself and through Christ the blessings of Abraham will flow to everyone who believes in Him.
Yes, today if you are a true believers of Lord Jesus Christ, then all the blessings that God promised Abraham and his descendants belongs to you.
You are heirs to the promises of God to Abraham.
You are heirs to health, abundance, peace, joy, oneness, God's protection, God's guidance, God's counsel and so on.
If you are heirs you have to claim it in Jesus name.
When you claim all the promises becomes yours, because you are the legal owner.
So why wait, you are heirs to Abraham's promise through his Seed, who is Christ Himself.
Claim your inheritance and live a blessed life.

நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருந்தால், நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறீர்கள். வாக்குத்தத்தத்தின்படியே உரிமையாளர்களாகவும் இருக்கிறீர்கள்.

கலாத்தியர் 3:29

ஆதியாகமம் 22:18 கர்த்தர் ஆபிரகாமை நோக்கி உன் விதை மூலியமாக உனக்கு கொடுத்த ஆசீர்வாதங்களை உலகத்திற்கு தருவேன் என்று வாக்குரைத்தார்.
அப்போஸ்தலர் பவுல் இந்த வசனத்தை கலாத்தியரில் தெளிவாக விளக்கி இருக்கிறார்.
ஆபிரகாமின் விதை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. அவரை விசுவாசிக்கிறவர்கள் ஆபிரகாமின் வாக்குத்தத்தங்களை பெற்றுக் கொள்ளுகிறார்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் ஆபிரகாமின் வாக்குத்தங்களுக்கு வாரிசாக இருக்கிறார்கள்.
ஆபிரகாமின் வாக்குத்தத்தங்கள் சுகத்தையும் நல்ல ஜீவியத்தையும் மிகுதியையும் கர்த்தரின் வழிநடத்துதலையும் கர்த்தரின் ஞானத்தையும் தருகிறதாய் இருக்கிறது.
இவ்வாறாக ஆபிரகாமின் வாக்குத்தத்தங்களுக்கு வாரிசாக இருக்கிற நாம் அதை பெற்றுக்கொண்டு அனுபவிப்பதற்கு அதை நாம் சுதந்தரிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் மூளியமாக அவருடைய நாமத்தில் இந்த வாக்குத்தத்தங்களை விசுவாசித்து நாம் நடக்கும்பொழுது அதை நாம் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களாய் காணப்படுகிறோம். அப்பொழுது அந்த வாக்குத்தத்தங்கள் எல்லாம் நம் வாழ்வில் நிறைவேறும்.
ஆதலால் எதற்காய் காத்திருக்கிறீர்கள், இயேசு கிறிஸ்துவின் மீது வைத்திருக்கிற விசுவாசத்தின் மூலியமாய் ஆபிரகாமின் வாக்குத்தத்தங்களை பெற்று ஆசீர்வாதத்துடன் வாழுங்கள்