Sound the Alarm / எக்காளம் ஊதுங்கள்

Blow the trumpet in Zion, sound the alarm on my holy hill.. For the day of the LORD is coming. It is close at hand.

Joel 2:1

During the last week of His ministry, Lord Jesus Christ said in Matthew 24 that He is going to come back and told us the signs for His coming and warned us to watch and pray.
Since then two thousand years have passed, many kingdoms have come and gone, many generations have passed, but still the believers in Christ awaits His return.
So when does this event happen, when does Lord Jesus Christ going to return back?
In Matthews gospel 24:32-33 Jesus said "learn from the parable of fig tree, when it's branch shoots up leaves, you know summer is near, likewise when you see the signs of my coming know that the end is near. This generation shall by no means pass away till all these things takes place".
The fig tree has been symbolic of nation of Israel, which was reborn in 1948. Since then 75 years have passed. A generation in biblical terms is 70-80 years.
The world events that are happening right now are exactly as prophesied in the bible.
Time will delay no longer, Hebrews 10:37 says "For yet a little while, And He who is coming will come and will not delay"
Be ready, seek Him with all your heart, read His word and spend time with Him and obey Him. Sound the alarm, eagerly wait for your Lord.
Heaven and earth shall pass away but His words will never pass away.

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.

யோவேல் 2:1

சிலுவையில் அறையப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திரும்பவும் நான் வரப்போகிறேன் என்று சொல்லி அவர் வருவதற்கான அடையாளங்கள் என்னவென்று தெளிவாக கூறிவிட்டு, காத்திருந்து ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லி சென்றார்.
இயேசு நான் வருவேன் என்று சொல்லி 2000 வருடங்கள் சென்று விட்டன, ஆனால் இன்றும் விசுவாசிகள் அவருடைய வருகைக்காக காத்திருக்கின்றன.
எப்பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வரப் போகிறார்.
மத்தேயு எழுதின சுவிசேஷ புத்தகத்தில் 24:32-34 இல், இயேசு தன் வருகைக்கான அடையாளங்களை சொல்லி இருக்கிறார். அத்திமரம் துளிர்விடும் பொழுது. அவருடைய வருகை மிக சமீபமாய் இருக்கும் என்றார்.
அத்திமரம் இஸ்ரவேல் தேசத்தை குறிக்கிறதாய் இருக்கிறது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரவேல் தேசம் துளிர்விட்டது. 2000 ஆண்டுகளாய் ஒரு தேசமாய் இல்லாத இஸ்ரவேல் மக்கள், 1948 ஆம் ஆண்டில் ஒன்றாய் கூடி வந்து வேத தீர்க்கதரிசனங்களின்படி தேசத்தை அமைத்தார்கள். இயேசு சொன்னார் அப்படியாக அத்திமரம் துளிர் விடும் பொழுது அந்த சந்ததியினர் என் வருகையை காண்பார்கள் என்று.
இஸ்ரவேல் தேசம் துளிர்விட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. வேத கணக்கின்படி ஒரு சந்ததி என்பது எழுவதிலிருந்து என்பது ஆண்டுகள் ஆக கருதப்படுகிறது.
கர்த்தருடைய வருகை மிக சமீபமாய் இருக்கிறது.
அதி சீக்கிரமாய் வருவேன் என்று சொன்ன நம் இயேசு கிறிஸ்து காலம் தாமதம் இல்லாமல் சீக்கிரமாய் வரப் போகிறார்.
ஆயத்தமாய் இருங்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள், இயேசுவின் போதனைகளை படித்து கீழ்ப்படிந்து அவருக்கு பிரியமாய் நடந்து கொள்ளுங்கள். எக்காலங்களை ஓதுங்கள், அவருடைய வருகைக்கு ஆவலாய் காத்திருங்கள்,
வானமும் பூமியும் ஒழிந்து போகும் ஆனால் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையோ ஒருநாளும் தவறாது.