God of present / நிகழ்காலத்தின் தேவன்

He is not the God of the dead, but the God of the living.

Mark 12:27

Lord Jesus Christ clarifies an important question from Sadducees. The group of Sadducees believed strongly that there is no live after death and hence no resurrection.
So they come to Jesus and try to trap him, ask an question based on a story and quoting law of Moses.
For this question, Jesus answers and shows them in the law of Moses concerning the dead rising and quoting from Exodus 3:6 "I am the God of Abraham, the God of Issac and God of Jacob".
Yes, He is the God of Abraham (not was). He is God of present.
He is not God over your life when you God saved, He is not God of past only. He is God of your present.
He is God of today, who watches over you, takes care of all your needs even before the day started.
He knows every details of your present and is working on your behalf to make every crooked path straight, bring your mountains down and rise up the valley's in your life.
Hence rejoice and be glad for the God whom you worship, Lord Jesus Christ and Holy Spirit are God of the present.


அவர் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார்; ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார்.

Mark 12:27

சதுசேயர்கள் கேட்ட முக்கியமான கேள்விக்கு இயேசு கிறிஸ்து பதில் தருகிறார். இந்த சதுசேயர் என்ற கூட்டம் உயிர்த்தெழுதலை நம்பாத ஒரு கூட்டம். மரித்த பிறகு ஜீவிப்பது இல்லை என்று ஆழமாய் நம்புகிறவர்கள்.
இப்படிப்பட்ட சதுசேயர்கள் இயேசுவிடம் வந்து மோசையின் கட்டளையின்படி ஒரு கதையை சொல்லி கேள்வி கேட்கின்றனர். அதற்கு இயேசு மோசேயின் கட்டளையின்படியே யாத்திராகமம் 3:6 இல் கூறியிருக்கிற வசனத்தை அவர்களுக்கு சுட்டிக் காண்பிக்கின்றார். அந்த வசனம் இவ்வாறாக கூறுகிறது, நான் ஆப்ரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனாய் இருக்கிறேன். அவர் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவனாய் இருந்தார் என்று அது கூறவில்லை, அந்த வசனம் ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவனாய் இருக்கிறேன் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நீங்கள் வணங்கும் தேவன், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிகழ் காலத்தின் தேவன். கடந்த காலத்தின் தேவன் மாத்திரமல்ல. இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கையில நடக்கிற ஒவ்வொரு காரியங்களையும் அறிந்தவர். இந்த நாள் துவங்குவதற்கு முன்பாகவே அவர் உங்களுக்கு முன்பாக சென்று கோணலான வழிகளை செமையாக்கி மலைகளைப் பெயர்த்து குன்றுகளை அவர் சரி செய்து இருக்கிறார். இன்றைக்கு நீங்கள் செய்கிற அனைத்து காரியங்களையும் அவர் கவனமாய் இருக்கிறார். இன்றைக்கு உங்களோடு அவர் முழு நாளும் அருகில் இருக்கிறார். அவர் நிகழ்காலத்தின் தேவன், ஆதலால் இயேசு உங்களோடு இருக்கிறார் என்று அறிந்து இந்த நாளை கடந்து செல்லுங்கள், உற்சாகப்படுங்கள், இயேசு உங்களோடு கூட இருக்கும் பொழுது எல்லா காரியமும் கூடி வரும்.